12181 – ஸ்ரீ காயத்ரி உபாசனா பத்ததி (காயத்ரி நித்ய ஹோம விதியுடன்).

தவயோகி கண்ணையா. நுவரெலியா: ஸ்ரீ காயத்ரி பீடம், ஸ்ரீ நகர், 82, லேடி மெக்கலம்ஸ் டிரைவ், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு 12: லீலா அச்சகம், 182, மெசெஞ்சர் வீதி).

30 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

முருகேசு சுவாமிகள் என அழைக்கப்பட்ட சுவாமி ஆர். கே. முருகேசு (ராமன் காளிமுத்து முருகேசு, அக்டோபர் 26, 1933 – செப்டம்பர் 24, 2007) இலங்கையின் இந்து ஆன்மீகவாதிகளில் ஒருவர். காயத்திரிச் சித்தர் என அனைவராலும் போற்றப்பட்ட இவர் இலங்கையின் நுவரெலியா நகரில் வாழ்ந்தவர். அந்நகரில் அமைந்துள்ள இலங்காதீஸ்வரர் ஆலயம் மற்றும் காயத்திரி பீடம் என்பன இவரால் நிறுவப்பட்டவையே. முருகேசு சுவாமிகள் 2007ம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றார். அங்கு மருத்துவமனை ஒன்றில், செப்டம்பர் 24, 2007 அன்று மறைந்தார். நுவரெலியா ஸ்ரீ காயத்திரி பீட வளாகத்திலுள்ள தியான மண்டபத்தில் சுவாமிகளின் ஜீவசமாதி அமைய பெற்றுள்ளது. தவயோகி கண்ணையாவின் சீடரான முருகேசு சுவாமிகள் தன் குருவின் நினைவாக இந்நூலைவெளியிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 897/42728).

ஏனைய பதிவுகள்