12186 – ஹரிஹர சுதன் தெய்வீகப் பாமாலை.

ஸ்ரீ ஐயப்பன் புனித யாத்திரைக் குழுவினர். கொழும்பு 6: மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம், 17A, மயூரா பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மார்கழி 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

(20), 160 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

ஐயப்ப பக்தர்கள் கூட்டம் மாலை அணிந்து விரத நியமம் பூண்டு மண்டலப்பூசை பஜனைகளைச் செய்து மகாசபரிமலை தர்மசாஸ்தாவின் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அவ்வகையில் கொழும்பு மயூரபதி அம்மன் தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஐயப்பன் புனித யாத்திரைக் குழுவினர் தமது பஜனைத் தேவைக்காக இந்தப் பாமாலை நூலை தொகுத்து வெளியிட்டுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38259). மேலும் பார்க்க 13A15, 13A16, 12030, 12727, 12892, 12895

ஏனைய பதிவுகள்