குமுதினி சாமுவேல். கொழும்பு 5: பெண்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு, 12- 1/1, அஸ்கொட் ஒழுங்கை, 1வது பதிப்பு, 1999. (இரத்மலானை: பிரின்ட் இன், 66/4, ஸ்ரீ தர்மாராம மாவத்தை).
90 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ., ISBN: 955-9078-02-X.
கனேடிய சர்வதேச மேம்பாட்டு முகவரகத்தின் ‘சக்தி பால்நிலை சமத்துவக் கருத்திட்டத்தின்’ நிதியுதவியுடன் வெளியிடப்பட்ட இவ்வறிக்கை 1998 ஜனவரி முதல் டிசெம்பர் வரையிலான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. பெண்கள் தொடர்பூடகக் கட்டமைப்பால் 1998ஆம் ஆண்டில் நான்கு பெண்ணு ரிமைகள் கண்காணிப்பு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. பெண்களுக்கு எதிராக, பெண்ணுரிமைகள் மீறப்படுகின்ற சம்பவங்கள் பத்திரிகைகளில் வெளியிடப் பட்டுள்ளவாறு அவற்றைத் தொகுத்து ஆய்வு செய்வதற்காகவே இவ்வறிக்கையில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 1998இல் குமுதினி சாமுவேல் வகுத்துத் தொகுத்து வெளியிட்ட பெண்ணுரிமைகள் கண்காணிப்புக் காலாண்டு அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்ட தரவுகளினதும் தகவல்களினதும் தொகுப்பு இதுவாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள், பெண்ணுரிமைகள் கண்காணிப்பு மூலமாக அறிக்கையிடப்பட்ட பெண்களுக்கெதிரான வன்முறைச் செயல்கள், பெண்களும் வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற பெண்களும், பெண்களும் இனப்பிரச்சினையும் ஆகிய நான்கு அத்தியாயங்களின்கீழ் இவ்வறிக்கை பல்வேறு தகவல்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. இதில் கவனம் செலுத்தப்பட்டுள்ள விடயங்களாக பெண்களுக்கெதிரான வன்முறைகள், இனப்பெருக்க சுகாதாரப் பிரச்சினைகள், வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற பெண்கள், அரசியல் மற்றும் மோதல்கள் சார்ந்த வன்முறைகளும் உரிமை மீறல்களும், பெண்களும் தொழிலும் ஆகியனவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24410).
மேலும் பார்க்க: 12847