ஏ.ஜே.வில்சன் (ஆங்கில மூலம்), கு.ஓ.ஊ.நடராசா (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு 2017, 1வது பதிப்பு, 1965. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(4), 162 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-496-6.
1912-1959க்கு இடைப்பட்ட இலங்கையின் அரசியல் வரலாற்றை அறிந்தகொள்ள இந்நூல் பெரிதும் உதவியாக இருக்கும். இலங்கை அரசியல் அமைப்பு விதிகளும் அரசாட்சியும், குறூ-மக்கலம் அரசியற் சீர்திருத்தம் (1912-1921), மானிங் அரசியல் திட்டத்தில் (1924-1931) தேசாதிபதி, மானிங் அரசியல் திட்டத்தின் கீழ் (1924) நிதிக்குழு, இலங்கை அமைச்சர்களின் அரசியல் பொருளாதார சமூகப் பின்னணி (1947-1959), இலங்கையில் அமைச்சர் அவை ஆட்சி (1947-1959) ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அல்பிரட் ஜெயரத்தினம் வில்சன் (1928-2000), கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தனது இளமாணிப் பட்டத்தினையும் லண்டன் பொருளியல் கல்லூரியில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியற் துறையில் பேராசிரியராகவும் பின்னர் கனடாவிலுள்ள நியூ பிரவுண்ஸ்விக் பல்கலைக்கழகத்தில் அரசறிவியற்துறைப் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியவர். (இந்நூலின் மூலப்பதிப்பு 1965இல் வெளியிடப்பட்டது. நூல்தேட்டம் பதிவிலக்கம் 5281.)