12225 – பல்லின சமூகத்தில் சனநாயகம்.

டொனால்ட் எல்.ஹரோவிட்ஸ் (ஆங்கில மூலம்), மா.கருணாநிதி (தமிழாக்கம்), எஸ்.அன்ரனி நோபேட் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5: மார்கா நிறுவனம், தபால்பெட்டி எண். 601, இல.61, இசிப்பத்தான மாவத்தை, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

102 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

Democracy in a Plural Society என்ற தலைப்பில் Donald L.Horowitz அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். ‘பிரிவுபட்ட சமூகங்களில் சனநாயகம்’ என்ற முதலாவது பிரிவில் தொடக்கநிலைத் தடைகள், சமுதாயத்தின் எல்லைகளைக் குறைத்தல், சேர்தலும் விலக்குதலும், சனநாயக நிறுவனங்களும் சனநாயகரீதியற்ற விளைவு களும், சனநாயகரீதியான மீள்மத்தியஸ்தம், இணங்கிச் செல்லும் நிறுவனங்களை உருவாக்கல் ஆகிய தலைப்புகளின்கீழ் விவாதிக்கப்பட்டுள்ளது. ‘சனநாயகச் செயல்முறையின் பிரச்சினைகள்’ என்ற இரண்டாம் பிரிவில் சனநாயகச் செயல்முறைக்கான தகுதி விதிகள், பெரும்பான்மை ஆட்சியும் சனநாயகச் செயல்முறையும், கடினத் தன்மைகள் ஆகிய மூன்று தலைப்புகளில் விடயப்பரப்பு ஆராயப்பட்டுள்ளது. இறுதிப் பகுதியான ‘சிறந்த மாற்றுவழியொன்று உண்டா?’ என்ற பகுதியில் மிகச்சிறந்த பெரும்பான்மை, வரையறுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி, ஓரளவு பாதுகாப்பு, பெரும்பான்மை வல்லாட்சி எதிர் சிறுபான்மை வல்லாட்சி, சனநாயக நாடுகளில் பெரும்பான்மை ஆட்சி, சனநாயகக் கோட்பாட்டி லும் பார்க்க சனநாயக நடைமுறையில் பெரும்பான்மை ஆட்சியின் மதிப்பு குறைவாக இருப்பது என்?ஆகிய உபதலைப்புகளின்கீழ் தனது கருத்துக்களை டொனால்ட் எல்.ஹரோவிட்ஸ் முன்வைத்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20029).

ஏனைய பதிவுகள்

14403 நாட்டார் பாடற் துளிகள்.

சு.குணேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அமரர் நடேசன் பொன்னம்பலம் அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு, கெருடாவில், வடமராட்சி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (அல்வாய்: மதுரன் கிராப்பிக்ஸ்). 14 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5

12798 – கண்ணாடி சுவர்களும் சில காகித மனிதர்களும்.

மொழிவரதன் (இயற்பெயர்: க.மகாலிங்கம்). கொட்டகலை: கலாபூஷணம் க.மகாலிங்கம், கொட்டகலை தமிழ்ச் சங்கம், 34ஃ20, மொழி அகம், கணபதிபுரம், 1வது பதிப்பு, மே 2017. (ஹட்டன்: யூனிவர்சல் அச்சகம்). 127 பக்கம், விலை: ரூபா 400.,

14131 சிவதொண்டன் நிலையப் பொன்விழா மலர் 2004.

எஸ்.வினாசித்தம்பி (ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சிவதொண்டன் நிலையம், 434 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி). (4), 94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12618 – இய ற்கையுடன் வாழுதல் : கட்டுரைகள் .

ஷியாமளா நவம். வல்வெட்டித்துறை: நான்காவது பரிமாணம், தெணியகம், பொலிகண்டி, 1வது பதிப்பு, 2017. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 120 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 300., அளவு: 18.5×13 சமீ., ISDN: 978-956-7295-00-8.

14751 என்னைக் காப்பாற்றிய காதலியின் துல்லிய பார்வை (நாவல்).

அமிர்தா ராஜகோபால். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை: ஸ்கிரிப்ட் ஆப்செட்). vi, 306 பக்கம், விலை:

14938 பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும் மொழியியலும்.

ஈழக் கவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 52 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 20.5×14 சமீ.,