12225 – பல்லின சமூகத்தில் சனநாயகம்.

டொனால்ட் எல்.ஹரோவிட்ஸ் (ஆங்கில மூலம்), மா.கருணாநிதி (தமிழாக்கம்), எஸ்.அன்ரனி நோபேட் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5: மார்கா நிறுவனம், தபால்பெட்டி எண். 601, இல.61, இசிப்பத்தான மாவத்தை, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

102 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

Democracy in a Plural Society என்ற தலைப்பில் Donald L.Horowitz அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். ‘பிரிவுபட்ட சமூகங்களில் சனநாயகம்’ என்ற முதலாவது பிரிவில் தொடக்கநிலைத் தடைகள், சமுதாயத்தின் எல்லைகளைக் குறைத்தல், சேர்தலும் விலக்குதலும், சனநாயக நிறுவனங்களும் சனநாயகரீதியற்ற விளைவு களும், சனநாயகரீதியான மீள்மத்தியஸ்தம், இணங்கிச் செல்லும் நிறுவனங்களை உருவாக்கல் ஆகிய தலைப்புகளின்கீழ் விவாதிக்கப்பட்டுள்ளது. ‘சனநாயகச் செயல்முறையின் பிரச்சினைகள்’ என்ற இரண்டாம் பிரிவில் சனநாயகச் செயல்முறைக்கான தகுதி விதிகள், பெரும்பான்மை ஆட்சியும் சனநாயகச் செயல்முறையும், கடினத் தன்மைகள் ஆகிய மூன்று தலைப்புகளில் விடயப்பரப்பு ஆராயப்பட்டுள்ளது. இறுதிப் பகுதியான ‘சிறந்த மாற்றுவழியொன்று உண்டா?’ என்ற பகுதியில் மிகச்சிறந்த பெரும்பான்மை, வரையறுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி, ஓரளவு பாதுகாப்பு, பெரும்பான்மை வல்லாட்சி எதிர் சிறுபான்மை வல்லாட்சி, சனநாயக நாடுகளில் பெரும்பான்மை ஆட்சி, சனநாயகக் கோட்பாட்டி லும் பார்க்க சனநாயக நடைமுறையில் பெரும்பான்மை ஆட்சியின் மதிப்பு குறைவாக இருப்பது என்?ஆகிய உபதலைப்புகளின்கீழ் தனது கருத்துக்களை டொனால்ட் எல்.ஹரோவிட்ஸ் முன்வைத்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20029).

ஏனைய பதிவுகள்

Wolf Run Tragamonedas

Content Wolf Run: Enorme Rtp Con manga larga Elevada Tensión Icy Wilds Wild Fury Jackpots ¿qué Funciones Específicas Tiene Una Tragamonedas Sin cargo Wolf Run?