சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம். கொழும்பு 8: சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம், 3, கின்சி ரெறஸ், 1வது பதிப்பு, வைகாசி 1995. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xiii, 328 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 210., அளவு: 22×14 சமீ., ISBN: 955-9062-24-7.
சுருக்க நோக்கு, இலங்கையில் அரசியல் உரிமைகளுக்கான கௌரவம், அவசரகால ஆட்சி, ஒரு நபரின் நன்மதிப்பைக் கௌரவித்தல், மனித உரிமைகளுக்கான நீதிமுறைப் பாதுகாப்பு, கடந்தகால மீறல்கள் பற்றிய புலன் விசாரணை, தண்டனையிலிருந்து தப்பித்தல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரமும் தொடர்பு சாதனங்களும், கலாசார உரிமைகள்: கலைத்துவ கருத்துவெளிப்பாட்டுக்கான உரிமை, தொழிலாளர் உரிமைகள், சமூக பொருளாதார உரிமைகள், சிறு பான்மையினர் உரிமைகளும் இனத்துவ முரண்பாடும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர், அகதிகளும் திருப்பி அனுப்புதலும், சிறுவர்களின் உரிமைகள், இலங்கையில் பெண்கள் நிலை ஆகிய 16 பிரிவுகளில் இவ்வறிக்கை எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30789).