சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம். கொழும்பு 8: சட்டத்துக்கும் சமூகத்துக்குமான அறநிலையம், 3, கின்சி ரெறஸ், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
xi, 207 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 955-9062-82-4.
2001ஆம் ஆண்டு தை-மார்கழி வரையுள்ள காலப்பகுதியை இவ்வறிக்கை உள்ளடக்குகின்றது. சுருக்க நோக்கு, இலங்கையின் அரசியலமைப்பிற்கான 17ஆவது திருத்தம், 2001இல் நீதித்துறை, சமூக பொருளாதார உரிமைகள் மற்றும் நிலைபேண் அபிவிருத்தியின் மீதான மின்சார நெருக்கடியின் தாக்கம், மனித உரிமைகளின் நீதிமுறைப் பாதுகாப்பு, இலங்கையின் பொதுச் சேவை ஆகிய ஆறு பிரிவுகளின்கீழ் இவ்வறிக்கை எழுதப்பட்டுள்ளது. அறிக்கையின் இறுதியில் மூன்று பின்னிணைப்புகளாக இலங்கையினால் பின்னுறுதிப்படுத்தப்பட்ட மனித உரிமைச் சாதனங்கள் (மார்கழி 2001), இலங்கையினால் பின்னுறுதிப்படுத்தப்படாத சில மனிதஉரிமைச் சாதனங்கள், 2001இல் தீர்மானிக்கப்பட்ட அடிப்படை உரிமை வழக்குகள் ஆகிய அட்டவணைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31479).