ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஸ்தானிகராலயம். கொழும்பு 7: ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஸ்தானிகராலயம், 97 ரொஸ்மீட் பிளேஸ், 1வது பதிப்பு, 2002.(அச்சக விபரம் தரப்படவில்லை).
24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
இந்த விதிகள் உள்நாட்டில் இடம்பெயர்வோர் இடம்பெயரும் ஒவ்வொரு கட்டத்திலும் தம் பாதுகாப்பு விடயங்களில் என்னென்ன உரிமைகளையும் உத்தரவாதங்களையும் பெறலாமென்பதைத் தெளிவுபடுத்துகின்றன. எதேச்சாதிகாரமாக விரட்டப்படுவதிலிருந்து பாதுகாப்பளிக்கின்றன. இடம்பெயரும் வேளையில் பாதுகாப்பு, ஒத்தாசை ஆகியவற்றை அளிப்பதற்கான வரைமுறையை வழங்குகின்றன. பாதுகாப்பாகத் திரும்பிச்சென்று மீளக்குடியேறி சமுதாயத்தில் மீளவும் இணைவதற்கான உத்தரவாதங்களையும் முன்வைக்கின்றன. இவை எவரையும் கட்டுப்படுத்தும் சாசனமாக இல்லாவிட்டாலும் சர்வதேச மனித உரிமைகள், மனிதநேயச் சட்டம், அதற்கமைவான அகதிச்சட்டம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1286/25489).