இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1997. (கொழும்பு: இலங்கை மத்திய வங்கி அச்சகம்).
(6), 89 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.
முதலாவது பகுதியில் 1997இன் பொருளாதாரம்: பொது நோக்கு என்ற தலைப்பின் கீழும், இரண்டாவது பகுதியில் பொருளாதாரச் செயலாற்றம்: முதலரைப் பகுதி 1997 என்ற தலைப்பின் கீழும், மூன்றாவது பகுதியில் பொருளாதாரத் தோற்றப்பாடு1997 என்ற தலைப்பின் கீழும், நான்காவது பகுதியில் 1998இற்கான பொருளாதார வாய்ப்புக்கள் என்ற தலைப்பின் கீழும் இலங்கையின் பொருளாதார நிலைமை அறிக்கையிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24008).