12259 – இலங்கையில் தமிழர் இறைமை.

சந்திரசேகரம் பரமலிங்கம். London: Segarams Publishers, 221A, Edgware Road, London NW9 6LP, 1வது பதிப்பு, ஜனவரி 2018. (தமிழ்நாடு: எழுத்து கலையகம், திருநெல்வேலி).

(42), 274 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-1-9999141-0-3.

‘சர்வதேசச் சட்டம், அரசுகளை மட்டுமன்றி, இன, மொழி, மத, சமூகப் பிரிவினரையும், அதனது விடயப்பொருளாகக் கொண்டு வளர்ச்சி கண்டுள்ளது. இப்பின்னணியில், இந்நூல் தமிழர் இறைமைக் கோரிக்கையுடன் தொடர்புடைய சர்வதேசச் சட்டக் கோட்பாடுகள், சட்ட ஆவணங்கள், தேசிய, சர்வதேச, நீதி மன்றங்களது தீர்ப்புகள் என்பன இலங்கைத் தமிழர்களது இறைமைக் கோரிக்கைக்குத் தீர்வுகாண எவ்வாறு பொருத்தமுடையன என்று ஆராய்கின்றது. காலம் காலமாக, பல்வேறு துறைசார்ந்தோரால் இலங்கைத் தமிழர்களது வரலாறு, அரசியல், கலாச்சாரம் என்ற விடயங்கள் எடுத்துக்காட்டப்பட்டாயிற்று. இலங்கைத் தமிழர்களது இறைமைக் கோரிக்கையின் சர்வதேசச் சட்டப் பரிமாணங்கள் எவை என்பதே இந்நூலின் அடிப்படைத் தேடுதலாக அமைகின்றது. இத்துறையில் இதுவே முதல் முயற்சி என நம்புகின்றேன்’ (நூலாசிரியர் முன்னுரையில்). இந் நூல் ஆய்வு பற்றிய பொது அறிமுகம், சர்வதேசச் சட்டத்தில் இறைமைக் கோட்பாடு, சர்வதேசச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை சட்டத் தத்துவமும், ஐ.நாவின் சட்ட கட்டமைப்பும், சர்வதேசச் சட்டத்தில் பிரிந்துசெல்லும் உரிமை, சர்வதேசச் சட்டத்தில் இறைமையும் மனித உரிமையும், சர்வதேசச் சட்டத்தில் சிறுபான்மை யோர் உரிமை, கொசோவா(Kosovo), குபெக் (Qubec) மக்களின் இறைமைக் கோரிக்கை, இலங்கைத் தீவின் வரலாற்றுப் பின்னணிகள், இலங்கையில் குடியேற்றவாதத்தின் முடிவாக்கம், தமிழ்த் தேசிய இனத்தின் இறைமைக் கோரிக்கையின் சட்டப் பரிமாணங்கள், சர்வதேசச் சட்டத்தின் அடிப்படையில் இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் இறைமைக் கோரிக்கைக்கான தீர்வுகள் ஆகிய பதினொரு அத்தியாயங்களில் இந்நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12569 – பாலபோதினி: ஐந்தாம் புத்தகம்.

வட இலங்கை தமிழ்நூற் பதிப்பகம். சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 11வது பதிப்பு 1966. 1வது பதிப்பு விபரம் அறியமுடியவில்லை. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (2), 124 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், விலை:

12011 ஞானம் : எழுத்துலகில் அ.முத்துலிங்கம ; 60.

தி.ஞானசேகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). 104 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை:

12984 – இராவண தேசம்: திருகோணமலை மண்ணின் வரலாற்றுப் பதிவுகள்.

திருமலை நவம் (இயற்பெயர்: திரு.சி.நவரத்தினம்). திருக்கோணமலை: வி.மைக்கல் கொலின், தாகம் பதிப்பகம், அனுசரணை, கனடா: உள்ளம் அமைப்பினர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (மட்டக்களப்பு: வணசிங்கா பிரின்டர்ஸ், திருக்கோணமலை வீதி). xvi, 160 பக்கம்,

14149 நல்லைக்குமரன் மலர் 2006.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2டB, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). ஒ, 136+ (48) பக்கம், புகைப்படங்கள், விலை: