12263 – நீதிமுரசு 2009.

இதழாசிரியர் குழு. கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரொப் வீதி, 1வது பதிப்பு, 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xx, 241 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 2009ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலரின் 44ஆவது இதழ், பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், அம்மா (சு.சு.உஷாந்தினி), பகிரங்க நம்பிக்கைப் பொறுப்புக் கோட்பாடு: ஓர் ஆய்வு (செ.செல்வகுணபாலன்), சன சமுதாயத்தில் பாதுகாப்புத் தேவைக்கான நிரலில் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்குவிதிகள் (ச.ஆனல்ட் பிரியந்தன்), எப்போது நான் நானாக (சிவதர்ஷினி சிவலிங்கம்), சட்ட முரணான கைது ஒரு அடிப்படை உரிமை மீறலாகும் (சா.அன்புவதனி), கனவாகிப் போய்விடுமோ? (இ.எழில்மொழி), பெண்ணியக் கவிதை வளர்ச்சி (மேமன்கவி), தமிழே எம்முடலிலே உதிரமாய் ஊறும் (மன்னார் அமுதன்) ஆகிய தமிழ்ப் படைப்பாக்கங்களும் ஏராளமான ஆங்கிலப் படைப்பாக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23093).

ஏனைய பதிவுகள்

14816 வீடு.

திக்குவல்லை கமால் (இயற்பெயர்: முகம்மது ஜெலால்தீன் முகம்மது கமால்). பத்தரமுல்ல: கலாசார அலுவல்கள் திணைக்களம், 8வது மாடி, செத்சிரிபாய, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (ராகம: நெலும் பிரின்டர்ஸ்). viii, 101 பக்கம், விலை: