12264 – நீதிமுரசு 2010.

இதழாசிரியர் குழு. கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரொப் வீதி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 6: எஸ். பி.கிராப்பிக்ஸ்).

xv, 245 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 300., அளவு: 29×20 சமீ.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 2010ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலரின் 45ஆவது இதழ் பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், சட்ட உதவியினைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை கோட்பாடுகளும் நடைமுறைப் பிரச்சினைகளும் (இரா.ஜெ.ட்ரொஸ்கி), கொசொவோ சுதந்திரப் பிரகடனத்தின் சர்வதேச சட்ட இயைபுத் தன்மை தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு: சில அறிமுகக் குறிப்புகள் (குமாரவடிவேல் குருபரன்), தீங்கியல் சட்டத்தில் கவனயீனம் எனும் கோட்பாடு (நடராஜா ரஜீவன்), சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையின் தார்ப்பரியம் (மேனகா கந்தசாமி), அதிகரித்துவரும் பெண்கள் மீதான வன்முறை சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள பெண்ணுரிமை கள் (வியாளினி தனபாலசிங்கம்), பகிடிவதைக்குப் பின்னால் (பவித்திரா வரவேஸ்வரன்), தீர்ப்பும் தண்டனையும் (ஜின்னாஹ் ஷரிபுத்தீன்), எதை எண்ணிப் பாட (மர்சூம் மௌலானா), பெய்யெனப் பெய்யா மழை (மட்டுவில் ஞானகுமாரன்), செந்நெறி காட்டும் வள்ளுவம் (இந்தி விமலேஸ்வரன்), தமிழ் இலக்கியங்கள் நீதித்துறைக்கு ஆற்றிய பணிகள் (எழில்மொழி இராஜகுலேந்திரா), வல்லமை தாராயோ? (எழில்மொழி இராஜகுலேந்திரா), வயோதிப இல்லத்திலிருந்தொரு மடல் (எம்.கே.எப். பசவா) ஆகிய தமிழ்ப் படைப்பாக்கங்களும் இருபது ஆங்கிலப் படைப்பாக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49928).

ஏனைய பதிவுகள்

14145 நல்லைக்குமரன் மலர் 1998.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (12), 108 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

12632 – மூலிகை மகத்துவம்.

இராமநாதன் கலைவாணன். மட்டக்களப்பு:அன்பு வெளியீடு, 18, நல்லையா வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2005. (மட்டக்களப்பு: எவர்கிரீன், திருமலை வீதி). xi, 73 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×15 சமீ.