12275 – நிழல்.

என்.கே.குலசிங்கம். யாழ்ப்பாணம்: கலாசாரப் பேரவை, நல்லூர்ப் பிரதேச செயலகம், நல்லூர், 1வது பதிப்பு, ஜனவரி 2016. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் அச்சகம், நல்லூர்).

vi, 146 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42883- 0-0.

யாழ்ப்பாணத்தில் காணப்படும் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றை இனம்கண்டு, அவை ஆற்றிவரும் சமூக சேவைகளையும், அவற்றின் குறிக்கோள்களையும், நிறுவனத்தின் வரலாற்றையும் அவை தொடர்பான மக்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கியமானதும் பயனுள்ளதுமான தகவல்களையும் உள்ளடக்கியதாக இவ்வாவணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் 32 அமைப்புகளைப் பற்றிய விபரங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் முன்னர் தினக்குரல் பத்திரிகையில் பிரசுரமான கட்டுரைகளாகும். ஊடகத்துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றிய இவரது இப் படைப்பாக்கங்கள் சமூகநலன் சார்ந்தவை. அந்த வகையில் இந்நூலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களாவன, பிரம்மகுமாரிகள் நிலையம், வாழ்வகம், சிவபூமி, மனதுருக்கம் அமைப்பு, குப்பிளான் சிவபூமி ஞான ஆச்சிரமம், ‘இதம்’ தொண்டு நிறுவனம், சிவபூமி அறக்கட்டளை நிதிய மண்டபம், நல்லை திருஞான சமபந்தர் ஆதீனம், சிவபூமி இல்லம், யாழ்ப்பாணம்-ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம், கைதடி சாந்தி நிலையத்தன் அரச முதியோர் இல்லம், துர்க்காபுரம் மகளிர் இல்லம், தேவை நாடும் மகளிர் அமைப்பு, கைகொடுக்கும் நண்பர்கள் அமைப்பு, பெதஸ்டா விஷன், சிவதொண்டன் நிலையம், சைவச்சிறுவர் இல்லம் (திருநெல்வேலி), பரமானந்தா ஆச்சிரமம், திருநெல்வேலி பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபா இல்லம், மகாதேவா ஆச்சிரமம், அகில இலங்கை இந்து மாமன்றம், சந்நிதியான் ஆச்சிரமம், விழிப்புலன் அற்றோர் சங்கம், செஞ்சிலுவைச் சங்கம், குடில்- மனநலம் குன்றியவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் சங்கம், சர்வதேச இந்து குருமார் ஒன்றியம், நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபம், காயத்ரிபீட தர்மசாஸ்த்தா குருகுலம், எஸ்.ஓ.எஸ்.சிறுவர் கிராமம், சொண்ட் நிறுவனம், யாழ்ப்பாணம் மனவளக் கலை மன்றம், ஆவரங்கால் V and T நம்பிக்கை நிதியம் ஆகியவையாகும்.

ஏனைய பதிவுகள்

14843 சிந்தனைத் திடரில் சிதறிய துகள்கள்.

கண்ணன் கண்ணராசன். யாழ்ப்பாணம்: சாரல் வெளியீட்டகம், சித்தங்கேணி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). x, 89 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5