12277 – வாழ்வகம்:விழிப்புல வலுவிழந்தோர் இல்லம்.

மோகனவதனி ரவீந்திரன். சுன்னாகம்: ஆறுமுகம் ரவீந்திரன், தலைவர், வாழ்வகம், சபாபதிப்பிள்ளை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2015. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி அச்சகம், காங்கேசன்துறை வீதி, இணுவில்).

(6), 66 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

விழிப்புல வலுவிழந்த மாணவர்கள் தமது அறிவினை விசாலித்துக் கொள்வதன் மூலம் தமது விழிக் குறைவை வெல்லவேண்டும் என்ற அடிப்படை நோக்குடனும் அவாவுடனும் 29.6.1988 அன்று கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி அம்மையாரினால் விழிப்புலன் இழந்த 12 சிறார்களுடன் தெல்லிப்பழையில் உருவாக்கப்பட்ட ‘வாழ்வகம்’ பற்றிய வரலாற்று நிகழ்வுகளையும், அதன் சிறார்கள் சமூகத்தில் அடைந்த உச்சங்களையும், சாதனைகளையும் புகைப்பட ஆதாரங் களுடன் பதிவுசெய்வதாக இவ்வாவணத் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தொகுப்பாசிரியை திருமதி மோகனவதனி ரவீந்திரன், வாழ்வகத் தலைவர் ஆறுமுகம் ரவீந்திரன் அவர்களின் துணைவியாரும், வாழ்வகத்தின் உப தலைவருமாவார்.

ஏனைய பதிவுகள்

17975 நான் பார்த்த நந்திக்கடல்.

முல்லை பொன். புத்திசிகாமணி. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 148 பக்கம், விலை: ரூபா 600.,