த.இராமநாதபிள்ளை. பருத்தித்துறை: த.இராமநாதபிள்ளை, அதிபர், புலோலி ஆண்கள் கல்லூரி, 1வது பதிப்பு, 1958. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).
(2), 166 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 21.5×14.5 சமீ.
உடலுயிர், உள்ளம், உளநூலறிவும் கல்வி கற்பித்தலும், சாதித தோற்றம், சாதி விருத்தி, வாழ்க்கை விழைச்சும்(Horme) முதிசஞானமும்(Mneme), விழைச்சுக்கள் (Instincts), உளத்திரிபு (அகநோய்), முதிசமும் சூழலும் (Heredity and Environment), பார்த்துச் செய்தல்-தூண்டுதல், இரங்குதல், ஒழுக்க வளர்ச்சி, கவனம், ஞாபகம், சந்தித்தல், புத்தி, விளையாட்டு. கூட்டுளம், கல்வியின் நோக்கம், பாடசாலை, விளையாட்டு மூலம் கல்வி, மன்றிசூரியம்மையார் முறை, உடன்படிக்கை முறை (டோல்ற்றன் முறை), ஏர்பாட் முறை, அடக்கமும் பாடசாலை ஒழுக்கமும், அடங்காப் பிள்ளைகள், கடைமாணாக்கர், தொழிற்கல்வி அறிவுக்கல்வி, முதியோர் கல்வி ஆகிய தலைப்புகளில் இந்நூலில் உளவியல்சார் கல்விச்செயற்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2837).