சு.க.சீவரத்தினம் (புனைபெயர்: சுகசீவன்). யாழ்ப்பாணம்: கச்சாய்த் தமிழ் இலக்கிய மன்ற வெளியீடு, கச்சாய், சாவகச்சேரி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2002. (சாவகச்சேரி: ஏ.ஆர்.எஸ். பிரின்டேர்ஸ்).
xvi, (4), 58 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 125.00, அளவு: 20×14 சமீ.
கச்சாயூர்ப் பண்டிதர், இளைப்பாறிய பாடசாலை அதிபர் கவிஞர் சுகசீவன் எழுதியுள்ள நூல் இது. 1966-1967 காலப்பகுதியில் யாழ்/ கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயிற்சியை முடித்தபின்னர் நுவரெலியா மாவட்டத்தில் ஐந்தாண்டு ஆசிரியப்பணியாற்றிய பின்னர் யாழ்./கச்சாய் அரசாங்க தமிழ் கலவன் பாடசாலையில் தன் பணியைத் தொடர்ந்தவர். 15.01.1975இல் அதிபர் பரீட்சையில் சித்தியடைந்து, வவுனியாக் கல்வி மாவட்டத்தில் சிறிதுகாலம் பணியாற்றியவர். பின்னர் 01.01.1982 இல் தன் விருப்பத்திற்குரிய முன்னைய பாடசாலையான கச்சாய் அ.த.க. பாடசாலைக்கே பணியாற்றத் தொடங்கினார். இவரது கல்விசார் அனுபவங்களின் வெளிப்பாடாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27468).