மா.செல்வராஜா. மகரகம: கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்துறை, தேசியகல்வி நிறுவகம், 2வது திருத்திய பதிப்பு, 1997, 1வது பதிப்பு, 1995. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 1-B, P.T. டீ சில்வா மாவத்தை).
iv, 128 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 120., அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-95598-5-0.
இந்நூலில் கல்விக் கொள்கை, கல்வி நோக்கங்களும் குறிக்கோள்களும், இலங்கையில் கல்வி நோக்கங்களும் குறிக்கோள்களும், இலங்கையின் கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்களைப் பிரதிபலிக்கும் செயற்பாடுகள், கல்விக் கொள்கை உருவாக்க மாதிரி, ஆசிரியர் கல்வி (சில உத்தேசிக்கப்பட்ட புதிய கொள்கைகளும் ஒழுங்கமைப்புகளும்), அதிபர்களது முகாமைத்துவத் திறன்கள், அதிபரும் அபிவிருத்தித் தலைமைத்துவமும், அறிவுறுத்தல் தலைமைத்துவமும் பாடசாலையில் கலைத்திட்ட முகாமையும், பாடசாலை நேரசூசி தயாரித்தல், பாடசாலை மேற்பார்வை, பாடசாலையில் தொடர்பாடல், கல்வி மாற்றங்களை முகாமைத்துவம் செய்தல், பாடசாலை அபிவிருத்திக்கு சமூக தொண்டர் ஸ்தாபனங்களின் பங்களிப்பும் அதிபரது கடமையும், பன்முகப்படுத்தலின்பின் கல்வி முறைமையில் கட்டமைப்பு, மாவட்டக் கல்வி நிருவாகத்தை மீள் ஒழுங்கமைத்தல், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள், தேசிய கல்வி நிறுவகம், தேசியகல்வி ஆணைக்குழு, பாடசாலைகளில் குழுக்கள் உருவாக்கமும் அவற்றை முகாமைசெய்தலும் ஆகிய 20 கல்வியியல் முகாமைத்துவம் சார்ந்த கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30361).