12306 – கல்விக்கான உரிமையும்உலகளாவிய ஏற்பாடுகளும்.

அல்-ஷெய்ஹ் எம்.முஹம்மத் ஜவாத். மூதூர் 05: அல்-ஹுஸ்னா பவுண்டேஷன், அரபிக் கல்லூரி வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2009. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½, டாம் வீதி).

x, 134 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-1248-02-4.

மனித உரிமைகள்-ஓர் எளிய அறிமுகம், கல்விக்கான உரிமை, கல்விக்கான உரிமையும் உலகப் பொது நோக்கும், அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம், சிறுவர் உரிமைகள்-ஒரு சுருக்க அறிமுகம், சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம், பொருளாதார சமூக கலாசார உரிமைகள் மீதான சமவாயம், பெண்களுக்கெதிரான எல்லாவகை ஓரங்காட்டுதலையும் நீக்குவது பற்றிய சமவாயம், தேசிய அல்லது இனம்சார் மதம்சார் மற்றும் மொழிசார் சிறுபான்மையோரைச் சேர்ந்த ஆட்களின் உரிமைகள் பற்றிய வெளிப்படுத்துகை, உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான நெறிமுறைகள், அகதிகளின் அந்தஸ்து தொடர்பான சமவாயமும் தாயேடும், இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை, கல்விக்கான உரிமையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டமும், யாவருக்கும் கல்வி, கல்விக்கான உரிமையும் சர்வதேச இடர்பாடுகளும்-ஒரு விமர்சனக் குறிப்பு, கல்விக்கான உரிமையும் தேசிய எற்பாடுகளும், கல்விக்கான உரிமையில் இலங்கை-சிலஅவதானங்கள், சுதந்திர இலங்கையில் கல்விக்கான உரிமை, இலங்கையில் கல்விக்கான உரிமையும் ஆவணம் சார்ந்த ஏற்பாடுகளும், இலங்கைப் பெண்கள் பட்டயம், இலங்கையில் கல்விக்கான உரிமை- ஒரு விமர்சனக் குறிப்பு, கல்விக்கான உரிமையும் பிராந்திய ஏற்பாடுகளும் ஆகிய 22 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47793).

ஏனைய பதிவுகள்

14456 மாற்றல் காரணிகளும் அட்டவணைகளும் (இலங்கைக் கட்டளை 99: 1975).

மெற்றிக் பகுதிக் குழு. கொழும்பு 3: இலங்கைக் கட்டளைகள் பணியகம், 53, தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). 180 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 7.50, அளவு: