12308 – கல்விப் பணியில் நாவலர்.

க.இரகுபரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 4: நாவலர் நற்பணி மன்றம், இல. 36, நந்தன கார்டின்ஸ், 1வது பதிப்பு 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

iv, 71 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

ஆறுமுக நாவலரது கல்விப்பணிகள் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நாவலரின் கல்விப்பணி (ச.தனஞ்சயராசசிங்கம்), நாவலர் கல்விப் பணி (ச.அம்பிகைபாகன்), கல்வித் துறையில் தீர்க்கதரிசனம் (கி.லக்ஷ்மணன்), கல்வியியல் நோக்கில் நாவலர் (இ.முருகையன்), ஈழத்துச் சிந்தனைக் கதிர் நாவலர் பெருமான் (ப.சந்திரசேகரம்), கல்வித்துறையில் நாவலரின் பெருங்கனவு (ஸ்ரீ பிரசாந்தன்) ஆகிய ஆறு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59213).

ஏனைய பதிவுகள்

17208 அரசியற் பதங்களின் அகராதி (சுருக்கம்).

போரிஸ் புத்ரின் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: தகவல் துறை, சோவியத் ஸ்தானிகராலயம், 1வது பதிப்பு, ஜனவரி 1980. (கொழும்பு 10: பிரகதி அச்சகம், 93, மாளிகாவத்தை வீதி). 176 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14