12309 – கல்விப் பாரம்பரியங்கள்.

வ.ஆறுமுகம். யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைப் பதிப்பகம், 374, மணிக்கூட்டு வீதி, திருத்திய 2வது பதிப்பு, ஒக்டோபர் 2000, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைப் பதிப்பகம்).

(4), 128 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ.

யாழ்ப்பாணத்தில் சைவக்கல்விப் பாரம்பரியம், 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சைவக் கல்வியின் நிலை, எமது கல்வி, ஆசிரியரின் பல்வகைத் தோற்றங்களும் செயற்பாடுகளும், கல்வியில் கடமையும் அர்ப்பணிப்பும், கல்வி அன்றும் இன்றும், 1970க்குப் பின் இலங்கைக் கல்வியில் புதிய போக்குகள் எதிர்பார்ப்பும் நிறைவேற்றமும், இலங்கைக் கல்வியில் மோர்கன் அறிக்கை, பன்மைச் சமூகத்தில் கல்வியின் நோக்கும் போக்கும், சுதந்திர இலங்கையில் கல்வியில் மொழிக் கொள்கை-பயன்நோக்கிய சிந்தனைகள் ஆகிய 10 அலகுகள் இடம்பெற்றுள்ளன. இவ்விரண்டாம் பதிப்பின் இறுதிக்கட்டுரை இப்பதிப்பிற்கெனப் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதுடன் 3வது அலகான ‘எமது கல்வி’ என்ற கட்டுரை திருத்திப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் பேராசிரியர் வ.ஆறுமுகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியற்துறைத் தலைவராவார். (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31261).

ஏனைய பதிவுகள்

14414 தமிழ் எழுத்துக்கள்.

நூலாசிரியர் குழு. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 2வது பதிப்பு, 2016, 1வது பதிப்பு, 2015.

14890 இலங்கை தேசப்படத் தொகுதி: இரண்டாம் பாகம்.

இலங்கை நில அளவைத் திணைக்களம். கொழும்பு 5: இலங்கை நில அளவைத் திணைக்களம், இல. 150, கிருல்ல வீதி, நாரஹேன்பிட்டிய, 1வது பதிப்பு, நவம்பர் 2013. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). xii, 161 பக்கம்,

12310 – கல்விப் பொதுத்தராதரப் பத்திரப் பரீட்சை (சாதாரணம்): 1978ஆம் ஆண்டு 10ஆந் தரத்துக்கான பாடத்திட்டம்.

கல்வி அமைச்சு. கொழும்பு: இலங்கை பரீட்சைத் திணைக்களம், கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, ஜனவரி 1978. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம், பரீட்சைத் திணைக்களம்). 87 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21X14 சமீ.

12830 – உரைநடை விருந்து.

நூல் வெளியீட்டுக் குழு. சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 6வது பதிப்பு, 1957, 1வது பதிப்பு, 1953. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (6), 118 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18

12983 – இணையிலி:சீரிணுவைத் திருவூரின் வாழ்வும் வளமும்.

மூத்ததம்பி சிவலிங்கம். யாழ்ப்பாணம்: சைவத்திருநெறிக் கழகம், இணுவில், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: ஈஸ்வா பிறின்டேர்ஸ், திருநெல்வேலி). xiv, 446 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 1000., அளவு: 25ஒ18.5 சமீ., ISBN:

12883 – மலேயா-இந்தியா யாத்திரை.

கா. இராமநாதன் செட்டியார். சுழிபுரம்: திரு.பே. கிருஷ்ணர், 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை). iv, 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 13.5 சமீ. தனது மலேயா-இந்திய யாத்திரை