12316 – கல்வியின் அடிப்படைகள்.

வீ.கருணலிங்கம், செ.திருநாவுக்கரசு. யாழ்ப்பாணம்: வீ.கருணலிங்கம், இல. 135, கன்னாதிட்டி வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மாருதி பிரின்டர்ஸ், 555, நாவலர் வீதி).

vi, 224 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42642-0-5.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம், மேற்படி கலாசாலையின் ஓய்வுநிலைப் பிரதியதிபரான செ.திருநாவுக்கரசு ஆகிய இருவரும் இணைந்து எழுதிய கல்வியியல்சார் நூல். கல்வி என்றால் என்ன? கல்வித் தத்துவவியலாளர்கள், பல்வேறு கல்வியியல் அணுகுமுறைகள், கல்வியின் புதிய போக்கு, ஆசிரியரின் முகாமைத்துவ வகிபாகம், சமூகமயமாக்கல், சமூகமயமாக்கல் காரணிகளின் பங்களிப்பு, சமூகப் பல்வகைமையும் சமூக வளங்களுக்கு ஏற்பக் கற்றல் கற்பித்தல் செயல்முறையை மேற்கொள்ளலும், பாடசாலைக்கும் சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகள், ஆசிரிய வாண்மைத்துவம், இலங்கையின் கல்வி வரலாறு, விளைதிறன் மிக்க பாடசாலை, அனர்த்த முகாமைத்துவக் கல்வி, கலைத்திட்டம், கற்றல்-கற்பித்தல் முறைகள், கற்றல் வளங்கள், கல்விசார் குறிப்புகள் ஆகிய 14 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 031188).

ஏனைய பதிவுகள்

Juegos De balde En internet ¡Tratar Ya!

Content Juegos Gratuito Online | rock climber máquina tragamonedas ¿Â qué es lo primero? muy fiable serí­a juguetear alrededor del Plinko? Modern Slots / Tragamonedas