12329 – பாடசாலையும் ஆசிரியரும்: ஓர் ஊடக வழிப் பார்வை.

மா.சின்னத்தம்பி (மூலம்), ப.இராஜேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தினக்குரல் பத்திரிகை நிறுவனம், 1வது பதிப்பு, 2009. யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம்).

viii, 116 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ.

தினக்குரல் பத்திரிகையில் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் ‘கல்விப் பயணம்’ என்ற மகுடத்தில் வெளிவந்த 25 கட்டுரைகளின் தொகுப்பு. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியற்துறைப் பேராசிரியரான மா.சின்னத்தம்பி இவற்றை எழுதியிருந்தார். ஆசிரியர்கள் ஆய்வாளராக ஏன் வளர முடிய வில்லை?ஆசிரியர் -மாணவர் தொடர்பாடலில் வன்மம் வளர்கின்றதா? கல்வி ஏற்றத்தாழ்வை ஊக்கப்படுத்துகின்றதா? களைந்துள்ளதா? மாணவர்களின் விழுமிய வளர்ச்சிக்கு யார் பொறுப்பு?ஆசிரியர்கள் வினைதிறன் குறைந்தவர்களா? ஆங்கில பாடத் தோல்வியை ஏற்பதா? யாது செய்யலாம்? ஆசிரியர்கள் உயர்கல்வியை பெறுகின்றனரா? அதனை விரயமாக்குகின்றனரா? ஆசிரியர்களிடம் சுயமுகாமைத்துவம் வளர்க்கப்படவில்லையா? பாடசாலைகள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துகின்றனவா? ஆசிரியர்கள் வகுப்பறையில் தோற்றுப்போய்விட்டனரா? நிறுவனங்களில் இணைந்தவர்களுக்கு கல்வி வழங்கினால் மட்டும் போதுமா? பாடசாலைகள் தவறானவையா? ரியூற்றரிகள் ஏன் அங்கீகாரம் பெற்றன? செலவந்த நாடுகள் வறிய நாட்டுப் பல்கலைக்கழகங்களை உயர்த்துகின்றனவா? ஆசிரியர் இடமாற்றம் ஏற்புடையதா? சிந்திப்போமா? பாடசாலை ஆசிரியர் ரியூட்டரியில் கற்பிக்கலாமா? பட்டதாரிகள் இலவச தயாரிப்புகளா? தரமான தயாரிப்பா? அதி திறமை மாணவர்களை பாடசாலைகள் கவனிப்பதில்லையா? பல்கலை படிப்பு வேலை பெற்றுத் தருமா? கைவிடுமா? கல்வி வியாபார மாகிவிட்டதா? சேவையுடன் செயற்படுகிறதா? பெற்றோர்-பிள்ளை கவனமின்மை: தோல்விக்கு காரணம் யார்? பாடசாலை மாணவர்கள் அறிவு, திறன் பெறுகின்றனரா? பெற்றோர் பாடசாலை தரிசிப்பில் அக்கறை இல்லையா/கல்வியில் முதலிடுவது வருமானத்தை அதிகரிக்குமா? சிறிய பாடசாலைகள் அவசியம்தானா? கல்வி உடலுழைப்பை விடுவிக்குமா? ஆகிய கல்விசார் கேள்விகளுக்குப் பதில்களாக இக்கட்டுரைகள் அமைகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47782).

ஏனைய பதிவுகள்