க.ஈசன், ச.ஜெகநாதன் (இதழாசிரியர்கள்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 6: எஸ். பிரின்ட்). (13), 157 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21சமீ. ‘இளங்கதிர்” பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினரால் வெளியிடப் படும் வருடாந்த இதழ். இதன் வெளியீடு 1948ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வருடந்தோறும் தொடர்ச்சியாக வெளிவருகின்றது. பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விரிவுரையாளர்களுக்குமான வெளியீட்டுக் களமாக இது விளங்குகின்றது. உள்ளடக்கத்தில் இலங்கையின் பல்லின பண்பாட்டு பாரம்பரியம், கலை பற்றிய ஆய்வுகள், இலக்கிய படைப்புக்கள், விமர்சனங்களுடன் தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகளின் பதிவையும் தாங்கி வெளிவருகின்றது. (இந்நூல்கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20646)
12255 – தொழிற்சங்க நூற்றாண்டு: 1893-1993.
இலங்கைத் தொழிலாளர் கல்வியாளர் கழகம். கொழும்பு: இலங்கைத் தொழிலாளர் கல்வியாளர் கழகம், இல. 7, சேர்க்குலர் வீதி, மவுன்ட் லவீனியா, 1வது பதிப்பு, 1995. (களனி: வித்யாலங்கார அச்சகம்). x, 181 பக்கம், விலை: