சீ.இராசலிங்கம், திருமதி து.தமயந்தி (இணையாசிரியர்கள்), செல்வி அருள்மணி சுப்பிரமணியம், து.இராதாகிருஷ்ணன் (துணையாசிரியர்கள்). மட்டக்களப்பு: கலைச்செல்விக் குழு, முத்தமிழ் மன்றம், அரசினர் ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, 1986. (மட்டக்களப்பு: சென்.செபஸ்தியன் பிரஸ், இல. 65, லேடி மனிங் டிரைவ்).
(92) பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.
க.கனகசூரியம் அவர்கள் அதிபராகவிருந்த காலகட்டத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. தமிழ்த் தெய்வ வணக்கம் (மனோன்மணியம்), கலாசாலை வாழ்த்துப்பா, மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை: கலைச்செல்விக் குழு 1986இன் அறிக்கை, பல்வேறு மன்ற அறிக்கைகள், அதிபர் ஆசியுரை ஆகியவற்றுடன் அறிஞர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய-மாணவர்களின் படைப்புகளையும் உள்வாங்கியதாக இம்மலர் வெளிவந்துள்ளது. அன்பெனும் அமுதம் (செல்வி அருள்மணி சுப்பிரமணியம்), சேனையுள் யானைக்கூட்டம் (ச.இந்திரநாதன்), வாழ்க்கை (என்.முத்துக்குமார்), இன்பம் பொங்கட்டும் இளைஞர் வாழ்வினிலே (இ.சங்கரப்பிள்ளை), மனமே உனக்கொரு வார்த்தை (திமிலைத்துமிலன்), ஏன்? (திருமதி விமலா சிவராமமூர்த்தி), பண்பான வாழ்வு (செல்வி அன்னபாக்கியம்), சூழல் (சா.மகாலிங்கம்) ஆகிய கவிதைகளும், ஒரு பிஞ்சின் உதிர்வு (செல்வி வ.மீனாம்பிகை), நியதிகள் நிலைமாறினால் (செல்வி நடராஜா யோகேஸ்வரி), அவளுக்கும் அதே கதி (திருமதி யோ. செல்வராஜா) ஆகிய சிறுகதைகளும், காலத்தைக் கணிக்கும் கருவிகள் (ஆர்.வெஸ்லஸ் வாஸ்), இலங்கையில் கலாயோகி ஆனந்த குமாரசுவாமி (வீ.இராசையா), மேதைகளுக்கான அடித்தளம் ஆரம்பக்கல்வி (வ.கனகசிங்கம்), பாலர் வகுப்பிலே பிரவேசிக்கும் பிள்ளையிடம் காணக்கூடிய நடத்தைக் கோலங்கள் (திருமதி அ.லோறன்ஸ்), நேரத்திற்கெதிராக (த.டே.பத்மகைலநாதன்), சித்திர இனங்கள்: சிறாரின் சித்திரம் (எம்.எஸ்.ஏ.அசீஸ்), பாரதியும் தமிழும் (செல்வி ஆர். பாரததேவி), நல்லாசிரியனும் மாணவரும் (திருமதி ரஜனி சிறீகரன்), கல்வி (செல்வி க.திலகவதி), பாலியல் கல்வி மாணவர்களுக்கு அவசியமா? (சி.இராசலிங்கம்), நீங்களும் உங்கள் நுண்ணறிவும் (மு.பரஞ்சோதி), பயம்-மனிதன்-விடுதலை (செல்வி ஜே.ஜெயராணி), 370.05 கல்விநிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டு மலர்கள்நூல் தேட்டம் – தொகுதி 13 215 கணனி ஒரு புதிய காலன் (ஜீ.வீ.அமல்ராஜ்) ஆகிய கட்டுரைகளும் இம்மலரை அலங்கரித்துள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 014440).