என்.நடராஜா (பதிப்பாசிரியர்), எஸ்.சிவநிர்த்தானந்தா (உதவி ஆசிரியர்). பத்தரமுல்ல: தமிழ் மொழிப் பிரிவு, மனிதவள அபிவிருத்தி, கல்வி, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு, இசுறுபாய, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 12: கிறிப்ஸ் பிரின்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 162, டாம் வீதி).
136 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.
கல்வி அமைச்சின் தமிழ் மொழி அலகு ஆண்டுதோறும் வெளியிடும் இம்மலரில் பல்வேறு கல்வியியலாளர்களால் எழுதப்பட்ட பல்துறைசார் கட்டுரைகள், ஆக்க இலக்கியங்கள் என்பன இடம்பெற்றுள்ளன. கற்றல்-கற்பித்தல் முறையில் பன்முக நுண்மதி (உ.நவரட்ணம்), எனது நாடு இலங்கை (எம்.யசோகீர்த்தனா), திருமுறை 370.05 கல்விநிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டு மலர்கள்216 நூல் தேட்டம் – தொகுதி 13 களில் இலக்கிய நெறி (அ.சண்முகதாஸ்), மலேசியத் தமிழ் இலக்கியத்தில் நாளிதழ் (எஸ்.குமரன்), கர்நாடக சங்கீதத்தின் பொற்காலம் (மீரா வில்லவராயர்), வாழ்க்கை வாழ்த்தும் (அதிஸ்டப்பிரதா தர்மலிங்கம்), விளைதிறன் கற்றலுக்கான கற்பித்தல் முறை (து.இராஜேந்திரம்), மலையகக் கல்வி அபிவிருத்தி: சில முன்மொழிவுகள் (தை.தனராஜ்), சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்போம் (ந.குருசாந்), நாடே செழித்திடுமாம் நன்று (தமிழோவியன்), தமிழ் இலக்கிய வளர்ச்சியில் வெகுசனத் தொடர்பு சாதனங்கள் (எஸ்.சிவநிர்த்தானந்தா), மாணவ மணிக்கு (த.சுந்தரலிங்கம்), இலங்கையை சிறப்பு நோக்காகக் கொண்டு வயது முதிர்வு (ஆர்.சிறீகாந்தன்), பட்டினத்தடிகள் அருளிச்செய்த திருப்பாடல்கள் (க.அருணாசலம்), மலையகத்தின் மாறாத அவலம் (காயத்ரி அருணாசலம்), விபுலாநந்த அடிகளாரின் தமிழ் உரைநடைப் பாணி (என்.நடராஜா), நடுத்தர வர்க்கம் (எம்எல்.இஸட் கயிர்), தேடல் (லெனின் மதிவானம்), முகில் விடு தூ து (தான்தோன்றிக் கவிராயர்), ஆசிரிய சேவையின் புதிய பரிமாணங்கள் (தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசாமி), அனைவருக்கும் அடிப்படைக் கல்வி (முத்து சிவஞானம்), சூழற் கல்வியும் எதிர்கால இளந்தலைமுறையினரும் (மனோன்மணி சண்முகதாஸ்), எங்கள் விழிநேர் தாயகம் (செ.சிவானந்ததேவன்), நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (ந.கணேசலிங்கம்), பாரதியின் மேதாவிலாசம் (எம்.ஏ.நு‡மான்), பெருந்தோட்டப் பாடசாலைகளும் கல்விச் சீர்திருத்தமும் (ம.சபாரஞ்சன்), ஏங்குதே ஏழை நெஞ்சு (பொத்துவில் அஸ்மின் உதுமாலெவ்வை), சமகால கணித ஆசிரியர் ஆற்றுகை (சி.பவனேஸ்வரன்), இன்றைய கல்விநிலை மீது ஒரு மேலோட்டமான பார்வை (எஸ்.ஜெயக்குமார்), நாட்டாரிலக்கியம் ஓரு அறிமுகம் (வல்வை. ந.அனந்தராஜ்), இ.சிவானந்தனின் கவிதைகள் (க.அருணாசலம்), உலக பாடசாலை நூலக நாளும் பாடசாலை நூலகங்களும் (ச.ஜேசுநேசன்) ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 33996, 56397).