12383 – கூர்மதி (மாணவர் சிறப்பு மலர்): 2005.

எஸ்.சிவநிர்த்தானந்தா (பதிப்பாசிரியர்), திருமதி ஜீ.தெய்வேந்திரராசா, பி.இராசையா (உதவிப் பதிப்பாசிரியர்கள்). பத்தரமுல்ல: தமிழ் மொழி அலகு, கல்வி அமைச்சு, இசுறுபாய, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 12: கிறிப்ஸ் பிரின்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 162, டாம் வீதி).

67 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.

கல்வி அமைச்சின் தமிழ் மொழி அலகு ஆண்டுதோறும் வெளியிடும் மலரின் மாணவர் சிறப்பிதழ் இது. மாணவர்களால் எழுதப்பட்ட பல்துறைசார் கட்டுரைகள், ஆக்க இலக்கியங்கள் என்பன இடம்பெற்றுள்ளன. எம்மவர் வரலாறு (க.விசாகன்), நிதர்சனச் சித்தன் மகாகவி பாரதி (மகாதேவன் வாகேஸ்வரி), குருதட்சணை (சி. செந்தூர்), திருக்குறளின் பெருமை (ஏ.மஞ்சுளா), அன்னையும் பிதாவும்….. (சங்கவை சிவநிர்த்தானந்தா), இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள் ஆவர் (ப.லியோ கொட்ஸி), பத்திரிகைகள் (அருண்யா சபாரஞ்சன்), நிம்மதி (ர்.யு.ளு.தாரணி), தேய்பிறையும் ஒளிதரும் (எஸ்.நிரஞ்சன்), தமிழ் மொழியின் பெருமை (காயத்திரி மகாதேவன்), கல்வியும் கல்வியின் சிறப்பும் (கணேசன் ரஜீவ்), நவீன விஞ்ஞானத்தினால் சுற்றாடலில் ஏற்படும் பிரச்சினைகள் (பஸ்னா பாரூக்), அம்மா (தர்ஷிகா ஸ்ரீஸ்கந்தராஜா), இஸ்லாத்தில் ரமழான் மாத நோன்பின் முக்கியத்துவம் (இ.இஹ்ஸான்), இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் தமிழ் இலக்கிய விமர்சன நோக்கு (சி.ஜனகன் முத்துக்குமார்), சர்வதேச அரங்கில் பெண்களின் நிலை (திவ்யா இரத்தினவேலு), மனிதன் மரித்தானோ (எஸ்.ஷர்மிலா), தித்திக்கும் தமிழ் மொழியை தழைக்கச் செய்வோம் (கவிதா பிரியதர்சினி நாகநாதன்), கல்வியறிவே உலகின் ஒளி (ச.பா.சபியா), விழித்தெழு (பாத்திமா சௌதா ஜெ.ஆப்டீன்), அரவணைப்பு (பஸ்னா பாரூக்), இனியும் வேண்டாம் (பா.பிரணவி), அன்பு (டிலுஷ்கா அபிராமி மூர்த்தி), தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவர் (எம்.எப்.எப்.றிபாஷா), ஜாதி (தாமோதரம்பிள்ளை ராகவன்), வையத்துள் வாழ்வாங்கு வாழ…… (செ. ஏகாந்தசெல்வி), விழிநீர் வீழ்ச்சி (பாத்திமா ஷகிலா ஹலால்டீன்), இஸ்லாம் கல்விக்கு அளித்துள்ள முக்கியத்துவம் (எம்.ஜே.எவ்.பரினா) ஆகிய மாணவர் படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37722. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 008458).

ஏனைய பதிவுகள்

Funds & Losings P&l

Posts Will cost you Show Shipping | pubg betting odds Fever Versus Wings Prediction, Pro Picks & Wnba Opportunity: Can also be Caitlin Clark &