12388 – சிந்தனை: மலர் 2 இதழ் 1 (ஏப்ரல் 1968).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்), க.அருமைநாயகம் (நிர்வாக ஆசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1968. (கண்டி: நேஷ னல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி).

(2), 54 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 1.25, அளவு: 24.5×18 சமீ.

இவ்விதழில் பள்ளிப்படை (சீ.ஆர்.ஸ்ரீநிவாசன்), 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட பெருமந்தம் (செ.ராஜரத்தினம்), ஈழநாட்டுத் தமிழ்ச் சாசனங்கள் -2: அநுராதபுரத்திலுள்ள குமாரகணத்துப் பேரூரார் கல்வெட்டுக்கள் (கா. இந்திரபாலா), பௌராணிக மதமும் சமணமும் (ஆ.வேலுப்பிள்ளை), போர்த்துக்கீசரும் கோட்டை இராச்சியமும் – அரசியல் தொடர்பு – 1505-1597 வரை (க.அருமைநாயகம்), தராதர இலங்கைத் தமிழ் – சில கருத்துக்கள் (தி.கந்தையா), இலங்கைப் பாராளுமன்ற நிறுவனங்களின் செயற்பாட்டை நிர்ணயிக்கும் காரணிகள் ஐஐஐ (ஏ. ஜே. வில்சன்) ஆகிய ஏழு ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 000678).

ஏனைய பதிவுகள்