12388 – சிந்தனை: மலர் 2 இதழ் 1 (ஏப்ரல் 1968).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்), க.அருமைநாயகம் (நிர்வாக ஆசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1968. (கண்டி: நேஷ னல் பிரின்டர்ஸ், 241, கொழும்பு வீதி).

(2), 54 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 1.25, அளவு: 24.5×18 சமீ.

இவ்விதழில் பள்ளிப்படை (சீ.ஆர்.ஸ்ரீநிவாசன்), 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஏற்பட்ட பெருமந்தம் (செ.ராஜரத்தினம்), ஈழநாட்டுத் தமிழ்ச் சாசனங்கள் -2: அநுராதபுரத்திலுள்ள குமாரகணத்துப் பேரூரார் கல்வெட்டுக்கள் (கா. இந்திரபாலா), பௌராணிக மதமும் சமணமும் (ஆ.வேலுப்பிள்ளை), போர்த்துக்கீசரும் கோட்டை இராச்சியமும் – அரசியல் தொடர்பு – 1505-1597 வரை (க.அருமைநாயகம்), தராதர இலங்கைத் தமிழ் – சில கருத்துக்கள் (தி.கந்தையா), இலங்கைப் பாராளுமன்ற நிறுவனங்களின் செயற்பாட்டை நிர்ணயிக்கும் காரணிகள் ஐஐஐ (ஏ. ஜே. வில்சன்) ஆகிய ஏழு ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 000678).

ஏனைய பதிவுகள்

15293 வளம் மிக்க வழக்காற்றியல்: ஆய்வுக் கட்டுரைகள் (Documenting Rich Folk Culture)

இராசையா மகேஸ்வரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). viii, 87 பக்கம்,

15052 எல்லாப் பூக்களுமே அழகுதான்: வாழ்வியலுக்கான அறிவியல் சிந்தனைகள்.

அ.ஸ.அகமட் கியாஸ். அக்கரைப்பற்று-2: இலக்கிய மாமணி ஆ.சா.அப்துஸ் சமது வெளியீடு, 228, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்). xv, (4), 129 பக்கம், விலை: