12408 – சிந்தனை: தொகுதி VI இதழ் 3 (நவம்பர் 1994).

இராசரத்தினம் சிவசந்திரன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1997. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை).

(9), 102 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 23.5×18.5 சமீ.

1994ஆம் ஆண்டிற்குரிய மூன்றாவது இதழ் பல்வேறு தடங்கல்களால் 1997இல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விதழில் சிறுவர்களும் அசைவுகளுக்கூடான கல்வியும்(சபா.ஜெயராசா), அரசியல் அபிவிருத்தியில் கட்சிகளை இனங்காணலும் வகைப்படுத்தலும் மதிப்பிடலும் (அ.வே.மணிவாசகர்), செங்கை ஆழியானின் நாவல்களில் வரும் உரையாடல்களின் மொழி பற்றிய சில குறிப்புகள் (ம.இரகுநாதன்), சங்ககால இந்திய மெய்யியல்-ஒருநோக்கு (கே.சிவானந்தமூர்த்தி), தலித்தியமும் அதன் கலை இலக்கியப் பார்வைகளும்: ஓர் அறிமுகம் (நா. சுப்பிரமணியன்), யாழ்ப்பாண இராச்சியமும் 1591ஆம் ஆண்டில் இடம்பெற்ற நல்லூர் உடன்படிக்கையும் (சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார்), இலங்கைப் பாடசாலைகளில் ஆரம்பமட்ட விஞ்ஞான பாடமும் அதில் உயிரியல் தொடர்பான அம்சங்களும் (சுசிலா அருளானந்தம்), அறிவும் உணர்வும் அரசியலும்: பௌத்தம் துரோகம் செய்தது? (என்.சண்முகலிங்கன்), சோழர்காலத் தமிழகத்தில் சமூக ஒன்றுகூடல் மையங்களின் முகாமைத்துவம்: சாசனச் சான்றுகளை அடிப்படை யாகக் கொண்ட ஓர் ஆய்வு (செல்லையா கிருஷ்ணராசா), சூழல்பேண் புதிய பொருளாதார ஒழுங்கும் இயற்கை வேளாண்மையும் (இரா.சிவசந்திரன்) ஆகிய பத்து ஆய்வுக் கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24508).

ஏனைய பதிவுகள்

Fruit Maniactwo Slots

Content Najkorzystniejsze Automaty Do odwiedzenia Rozrywki Przez internet Huuuge Casino Slots Vegas 777 Postaw na Osobisty Bonus Każde świeże kasyno na temat Automat internetowy Treasure

13537 கலைஞர் திரை இசைப் பாடல்கள்.

சிலோன் விஜயேந்திரன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600 002: காந்தளகம், 4, முதல் மாடி, ரசிகா கட்டிடம், 834 அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஆனி 1989. (சென்னை 600 002: காந்தளகம், 4, முதல் மாடி,