இராசரத்தினம் சிவச்சந்திரன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(8), 142 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 25×20 சமீ.
வெள்ளிவிழாச் சிறப்பிதழாக வெளிவந்திருக்கும் இப்பதிப்பில் சுதந்திர இலங்கை யில் கல்வியில் மொழிக் கொள்கை: பயன் நோக்கிய சிந்தனைகள் (வ.ஆறுமுகம்), இலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தேசிய மறுமலர்ச்சியும் கல்வியில் சுதேச மொழிகளின் எழுச்சியும் (அனுஷ்யா சத்தியசீலன்), தண்டனையும் தண்டனைக் கொள்கைகளும் (கந்தசாமி அன்ரன் டயஸ்), மெய்யியலில் ஐயவாதம் (கனகசபை சிவானந்தமூர்த்தி), சர்வதேச ரீதியான தொழிலாளர் குடிபெயர்வும் விளைவுகளும் (மா.செ.மூக்கையா), யாழ்ப்பாண மாவட்ட தீவக மக்களின் நம்பிக்கைகள்: ஓர் ஆய்வு நோக்கு (கி.விசாகரூபன்), யாழ்ப்பாணக் குடாநாட்டின் உள்நாட்டுக் கடல்நீரேரி நிலவுருவங்கள் (எஸ்.ரி.பி. இராஜேஸ்வரன்), யாழ்ப்பாணத்து மரபுவழிப் பெண்கல்வி (சபா.ஜெயராசா), இலங்கை முஸ்லிம்களின் கல்விமொழி மாற்றம்: சில பிரச்சினைகள் (எம்.ஏ.நு‡மான்), செய்மதித் தொலை உணர்வுத் தொழில்நுட்பம்: எண்ணக்கருக்களும் பிரயோகங்களும் (கருணாகரன் சுதாகர்), இடைநிலைப் பாடசாலை மாணவரது கல்வியில் தாக்கம் கொள்ளும் பாடசாலை வளங்கள் பற்றிய ஒரு நோக்கு- யாழ் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு (சுசீலா அருளானந்தம்), இலங்கையின் தகவல் தொடர்பாடலில் தமிழ் (இராசரத்தினம் சிவசந்திரன்) ஆகிய 12 படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.