12421 – தாரகை – இதழ்19:2015.

சி.ஸஹானா, பா.ஸாஹிரா (இதழாசிரியர்கள்). கொழும்பு: வுல்வெண்டால் பெண்கள் உயர்தரப் பாடசாலை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

177 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

கொழும்பு வுல்வெண்டால் பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவியரால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் தாரகை ஆண்டிதழின் 19ஆவது இதழ் இது. பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் ஆக்கங்களுடன், கல்லூரி அறிக்கைகளையும் சேர்த்து இவ்வாண்டுமலர் பிரசுரமாகியிருக்கின்றது. இலைமறை காயாக மாணவர்களிடம் காணப்படும் ஆற்றல்களையும், ஆளுமைகளையும், திறன்களையும் வெளிக்கொண்டுவரும் களமாக இது அமைகின்றது. தாரகையின் இதழ்ப் பொறுப்பாசிரியையாக திருமதி கோ.மதியழகன் செயற்பட்டிருந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61263).

ஏனைய பதிவுகள்

16766 பயங்கரவாதி.

தீபச்செல்வன் (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). சென்னை 600 078: டிஸ்கவரி புக் பலஸ், இல. 6, மஹாவீர் கொம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (சென்னை 600 078: டிஸ்கவரி