12428 – பல்கலை: தொகுதி 07, இதழ் ; 01: 2015

. வீ.மகேஸ்வரன், பீ.எம்.ஜமாஹிர் (இணையாசிரியர்கள்), கே.ஞானேஸ்வரன் (நிர்வாக ஆசிரியர்). பேராதனை: கலைப்பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).

vi, 108 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 24.5×17 சமீ.

‘பல்கலை”, பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தினால் ஆண்டுக்கு இருமுறை ஜனவரி, ஜுலை மாதங்களில் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டதொரு ஆய்விதழ். சமூக விஞ்ஞானம், மனிதப் பண்பாட்டியல் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளும் நூல் மதிப்புரைகளும், கருத்துரைகளும் இவ்வாய்விதழில் பிரசுரமாகின்றன. ஏழாவது ஆண்டின் முதல் இதழாக மலர்ந்துள்ள இவ்விதழில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிப் போக்கும் சமூக நலத்துறையின் பங்களிப்பும் (எஸ்.விஜேசந்திரன், என்.மகேஸ்வரன்), மகாகவி அல்லாமா இக்பாலின் சமய மெய்யியல் சிந்தனைகள் (பி.எம்.ஜமாஹிர்), மெய்கண்டாரின் உபநிடதக் கொள்கை (பொ.சந்திரசேகரம்), இலங்கையில் பூந்தலை தேசிய பூங்காவில் யானைகளைப் பாதுகாப்பதில் உயிரின இணைப்பு வழிகளது வகிபங்கு (எம்.ஏ.எம்.இஸ்திகார்), பாடசாலை நூலகங்கள்: புதிய கோட்பாடும் நடைமுறையும் (மைதிலி விசாகரூபன்), எடுத்துரைப்பியல் நோக்கில் எம்.ஏ.நு‡மானின் அதிமானிடன் (எம்.எம்.ஜெயசீலன்), முயற்சியாண்மையை விருத்தி செய்வதில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் பேரண்டச் சூழல் சவால்கள் (வ.தர்மதாசன், இரா.நிர்மலாதேவி) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12979 – பபிலானியாவில் இயேசுவும் தமிழர்களும்.

A.E.C.இராசரெத்தினம். வவுனியா: A.E.C.இராசரெத்தினம், 154, குட்செட் வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (வவுனியா: அமைதி அச்சகம், 154, குட்செட் வீதி). 83 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19 x