12454 – இலங்கையின் வருங்கால ஆசிரியர்கள் (சஞ்சிகை இலக்கம் 2).

யூ.எம்.அபயவர்த்தன (ஆசிரியர்). கொழும்பு 2: கல்வி நூற்றாண்டு விவசாய விசேட வெளியீடு, வேலையனுபவ விவசாயக் கிளை, கல்வி கலாச்சார அமைச்சு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1969. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

51 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

இலங்கையின் கல்வி நூற்றாண்டையொட்டி வெளியிடப்பட்ட விசேட சஞ்சிகையின் இரண்டாவது இதழ். விவசாயத்தில் அமைதியான புரட்சி (வீ.துரைசிங்கம்), பொருளாதார அபிவிருத்திக்கான கல்வி (கு.ளு.ஊ.P. கல்பகே), விவசாயச் சமுதாய பாடசாலை (ஈ.அபயரத்ன), விவசாயம் கற்பித்தலைத் தொழிலாகக் கொள்ளல் (பி.என்.சிங்), வேலை அனுபவம் (ஜீ.டீ.சோமபால), பாடவமைப்புத் தயாரித்தல் (என்.எம்.கே.அரம்பேபொல), விவசாயம் கற்பித்தலிற் கட்புல உபகரணங்கள் (யூ.எம்.அபயவர்த்தன), வீட்டுத் தோட்டத் திட்டங்கள் (ர்.யு.து.ர். ரணவக்க), பாடசாலைத் தோட்டத்தை அமைத்தல் (தி.பெரியதம்பி), பயன்தரக்கூடிய விவசாயக் கல்விக்கான சியவச மாதிரிப் பண்ணைகளைப் பாடசாலைகளில் அமைத்தல் (ர்.னு.ளு.சுமனசேகரா), விவசாய விஞ்ஞான பாடத்திற்கான வகுப்புச் சோதனைக்குரிய வினாக்களைத் தயாரித்தல் (பி.என்.சிங்), பாடசாலைகளிலும் வீட்டுத் தோட்டங்களிலும் தேனீ வளர்த்தல் (யூ.எம்.அபயவர்த்தன), புதிதாகக் கோழி வளர்ப்பு ஆரம்பிப்பவர்களுக்கு (ஜே.டீ.ரன்முத்துகல) ஆகிய 13 விவசாயம் சார்ந்த கட்டுரைகளை இவ்விதழ் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35609).

ஏனைய பதிவுகள்

13A01 – இலங்கையில் இஸ்லாம்.

M.M.A.அஸீஸ். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 10, மெயின் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1963. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்). (10), 224 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18 x 12.5