மலர்க் குழு. கொழும்பு: கொழும்பு தெற்குக் கல்விக் கோட்டம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஜுன் 1994. (வத்தளை: வத்தளை பிரின்டர்ஸ், 17/10, நீர்கொழும்பு வீதி).
(76) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.
04.6.1994 அன்று இடம்பெற்ற தமிழ் மொழித்தின விழாவின்போது கொழும்பு தெற்கு கல்விக் கோட்டத்தினரால் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். இணைச் செயலாளர்களாக அருளானந்தம் அருள்பாஸ்கரன், பொன்மலர் கணேசராசா ஆகியோர் இயங்கியுள்ளனர். உங்களுடன் சில நிமிடம் (அருளானந்தம் அருள்பாஸ்கரன்), இலக்கிய விமரிசனமும் இலக்கியம் கற்பித்தலும் (கார்த்திகேசு சிவத்தம்பி), திருக்குறளும் பகவத் கீதையும் (நா.சுப்பிரமணியன்), மாணவர்களின் கற்றற் பாங்குகளும் வகுப்பறைத் தொடர்புகளும் (சோ.சந்திரசேகரன்), ஆலயத்திலிருந்து அரங்கேறிய தெய்வீகக்கலை பரதக்கலை (சாந்தினி சிவநேசன்), தமிழ்மொழி பற்றிய விபுலானந்த அடிகளாரின் நோக்குகள் (இ.பாலசுந்தரம்), ஒழுக்கம் விழுப்பம் பெற விழுமியக் கல்வி (கு.சோமசுந்தரம்) ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரை அலங்கரிக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34614. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 009333).