12478 – தமிழ்மொழித் தினம் 1993.

மலர்க் குழு. திருக்கோணமலை: கல்வித் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஜுன் 1993. (திருக்கோணமலை: பிரைட்ஸ் அச்சகம்).

(21), 13 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

1993 ஆனித் திங்கள் 28ஆம், 29ஆம் திகதிகளில் திருக்கோணமலை புனித சூசையப்பர் கல்லூரி மண்டபத்தில் நடத்தப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண அரசின் கல்வித் திணைக்களத்தின் தமிழ் மொழித் தின நிறைவுநாள் விழாவின்போது 29.6.1993 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்த் தாய் வணக்கம், ஆசிச் செய்திகள் (திருமதி. இராசமனோகரி புலந்திரன், லெப். ஜென. ஜீ. டி. ஜீ. நளின் செனவிரத்ன, வெற்றிவேலு சபாநாயகம், திரு. சொ. கணேசநாதன், ஜனாப். எம். ஏ. சீ. முகைதீன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் க. தியாகராசா), வாழ்த்துச் செய்தி (ஜனாப். எம். ஈ. எச். ம‡றூப்), கவிதை: எங்கள் தமிழ்ப் பாவை (ஆலையூரன்), தமிழ் மொழித்தின விழாக் குழுச் செயலாளரின் செய்தி (எஸ். கமலநாதன்), மலர்க்குழு இணைப்பாளரிடமிருந்து…(எஸ். எதிர்மன்னசிங்கம்), ஆசிரியர் கீதம் ஆகியவை இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 009564. இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34618).

ஏனைய பதிவுகள்