து.ஜெயகிருஷ்ணன், ஏ.ராஜகுமார், ஏ.சந்திரஹாசன், மு.சுமந்திரன் (மலர் ஆசிரியர்கள்). மொரட்டுவை: இரண்டாம் வருட மாணவர்கள், தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா, மொரட்டுவை பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1998. (அசசக விபரம் தரப்படவில்லை). (10),
160 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.
மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா வகுப்பு மாணவர்களில் அப்பயிற்சியின் இரண்டாவது வருடத்தில் பயிலும் மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு 31.10.1998 இல் நடைபெற்றது. அவ்வேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இது. குருவிற்குக் குரு, என்னவளைக் கண்டிடுவேன், நிறம்மாறும் மனிதர்கள், நாம், சுயகட்டுப்பாடு, நிம்மதியைத் தேடி, நட்பு, உண்மை ஒளி, விபத்துக் கொலைகள், தெளிவு, பண்டைய இலக்கியமும் நவீன இலக்கியமும், இன்ரர்நெட், மனிதம் மறந்தா மனிதா?, நின்னுக்கோரி வர்ணம், முடியாத யுத்தம், முகவரி தவறியதால் உன்னை முழுதாய்த் தெரியவில்லை, ஆயுதம், உலகில் விடுதலைப் போராட்டங்கள், வீழ்தலையும் காதல் செய்பவன், நினைவோடு உனக்காக, இளமை, இன்றைய இளைஞர், யாரிடம் நான் உரைப்பேன், ஞாபகங்கள் தாலாட்டும், சாதி, இன்ரர்நெட்டின் வரவும் தொடர்ந்து வரும் சவால்களும், வளாகத்தில், கவிதைத் துளிகள் ஆகிய படைப்பாக்கங்கள் மாணவர்களின் கைவண்ணத்தில் உருவாகி இம்மலரில் பதியம் பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21700).