12499 – யா/புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயம் நூற்றாண்டு மலர்.

த.தவரூபன், சு.சண்முகானந்தன் (மலராசிரியர்கள்). புங்குடுதீவு: நூற்றாண்டுவிழாக் குழு, புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயம், 5ஆம் வட்டாரம், இறுப்பிட்டி, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).

xii, 264 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

தீவக கல்வி வலயத்தின் வேலணை கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயம் 2014இல் தனது நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடிய வேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர். புங்குடுதீவு ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயத்தின் வரலாறு, நிறுவுநர் வரலாறு ஆகியவற்றுடன் தொடங்கும் இம்மலர் வாழ்த்துச் செய்திகள், ஆசியுரைகள், வாழ்த்துரைகள், சர்வதேசச் சங்கத்தினரின் வாழ்த்துக்கள், பழைய மாணவர்களின் வாழ்த்துக்கள், பாடசாலை அதிபர்கள், மற்றும் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், கிராமத்து அதிபர்கள், பழைய மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், கிராமத்துப் பெரியோர்கள், ஆகியோரின் நினைவுப் பதிகைகளுடன் பாடசாலை ஆசிரியர் , மாணவர்களின் தேர்ந்த படைப்பாக்கங்களுடன் இம்மலர் வெளிவந்துள்ளது. நூலின் சிறப்பம்சமாக பிரதேசத்தின் வரலாற்றுக் கட்டுரைகளாக புங்குடுதீவு சமய, சமூக பண்பாட்டு நோக்கு, தவத்திரு தனிநாயகம் அடிகளாரது பன்முக ஆளுமை, புங்குடுதீவு இறுப்பிட்டிக் கிராமம் வளமும் வாழ்வும், கல்வியின் சிறப்பு, யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் உணவுப் பண்பாடு, தீவகத்து இந்துக் கோயில்கள் தொன்மையும் தொடர்ச்சியும், தீவகத்து மரபுரிமைச் சின்னங்கள்- சில வரலாற்றுக் குறிப்புகள் ஆகிய ஏழு சிறப்புக் கட்டுரைகளும் பக்கம் 198-259 களில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்