12500 – யாழ். இந்து மகளிர் கல்லூரி: பொன்விழா மலர் 1943-1993.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: அருண் பிரின்டர்ஸ்).

(10), 132 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.

இப்பொன்விழா மலரின் மலர்க்குழுவின் இணைப்பாளராக திருமதி ச. பாலசுப்பிரமணியமும், அங்கத்தவர்களாக திருமதிகள் தி.யோகநாதன், இ. சண்முகம், ஞா.சொக்கலிங்கம், கா.சிவநேசன், செல்வி அ.கந்தையா, திரு சு. சிவபாலன் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர். நல்லாசிகளுடனும் வாழ்த்துக் களுடனும் தொடங்கும் இம்மலரில் கல்லூரி அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சபை, பழைய மாணவர் சங்கம், ஆசிரியர் மன்றம் ஆகியவற்றின் அறிக்கைகள் அடுத்ததாக இடம்பெறுகின்றன. தொடரும் சிறப்புக் கட்டுரைப் பகுதியில் நடுத்தோட்ட இராஜவரோதயப் பிள்ளையார் கோவில் வரலாறு (திருமதி இ.சண்முகம்), கல்வியில் கடமையும் அர்ப்பணமும் (பேராசிரியர் வ.ஆறுமுகம்), இலங்கையில் பெண்களும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புகளும் (திரு.கா.குகபாலன்), சூழலைப் பாதிக்கும் விவசாய நடவடிக்கைகள் (கலாநிதி பால.சிவகடாட்சம்), கோவிலும் நாமும் (செல்வி அ.கந்தையா), இலங்கையில் வணிகக் கல்வியும் பல்கலைக்கழக அனுமதியும் (செல்வி நி.சண்முகம்), மாணவர் உலகை நோக்கிச் சமூகத்தின் சில எதிர்பார்ப்புக்கள் (செல்வி த.நகுலேசபிள்ளை) ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து வரும் பக்கங்களில் ஆசிரியர்களின் பசுமை நினைவுகள், மாணவர் ஆக்கங்கள், மன்ற அறிக்கைகள் என்பன இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39199).

ஏனைய பதிவுகள்

12161 – நாளும் நலம் தரும் நாம பஜனை.

ஆர்.சுந்தரராஜ சர்மா (தொகுப்பாசிரியர்). அட்டன்: ஜெயதுர்க்கா பீடம், பொன்னகர், இணை வெளியீடு, திருக்கோணமலை: இந்து சமய அபிவிருத்திச் சபை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால்