12517 – சர்வதேச வர்த்தகமும் ஒத்துழைப்பும்:

சர்வதேச அமைப்புக்கள். ஜெயராணி தியாகராஜா, வீரகுட்டி தியாகராஜா. கொழும்பு 13: கீதா பப்ளிகேஷன், 1வது பதிப்பு, தை 2001. (கொழும்பு: நிஷான் பிரின்டர்ஸ்).

(6), 114 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 90., அளவு: 21×14 சமீ.

தரம் 11 சமூகக் கல்வியும் வரலாறும் பாடத்திற்கான முதல் இரு அலகுகளான சர்வதேச வர்த்தகமும் ஒத்துழைப்பும், சர்வதேச அமைப்புக்கள் அூகிய இரண்டு பாடக்கூறுகளுக்குமான மேலதிக பாடநூல் இது. முதலாவது அலகில் சர்வதேச வர்த்தக விருத்திக்கான காரணங்கள், இரு பக்க வர்த்தகமும் பல்பக்க வர்த்தகமும், நாணய மாற்று விகிதம், சென்மதி நிலுவை, வர்த்தக மீதி, வர்த்தக விகிதம், சர்வதேச வர்த்தகத்தின் சாதகமும் பாதகமும், சர்வதேச வர்த்தகத்தினால் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம், சர்வதேச வர்த்தகம் தொடர்பான சர்வதேச தாபனங்கள், வெளிநாட்டு உதவி, வெளிநாட்டுக் கடன், வெளிநாட்டு நன்கொடை ஆகிய விடயப் பரப்புகள் தனித்தனிப் பாடங்களாக விளக்கப்பட்டுள்ளன. இரண்டாவது அலகில் தென்னாசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்புசார்க், சப்தா, சப்ரா, கொழும்புத் திட்டம், பொதுநலவாய அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் அமையத்தின் சில முக்கிய இணைத்தாபனங்கள் (யுனெஸ்கோ, யுனிசெப், உலக சுகாதார ஸ்தாபனம், ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி தாபனம், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம், சர்வதேச தொழிலாளர் தாபனம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், புனரமைப்புக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச வங்கி), சர்வதேச நாணய நிதியம், பெற்றோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு – ஓபெக், தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் – ஆசியான், ஆசிய அபிவிருத்தி வங்கி, பரீட்சை மதிப்பீட்டுக் கருவிகள் ஆகிய விடயப் பரப்புகள் தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அதிதி விரிவுரையாளராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36567)

ஏனைய பதிவுகள்