12518 – வணிகக் கல்வி: உயர்தர வகுப்புகளுக்குரியது:

வங்கிகளும் வங்கித் தொழிலும். சு.இராஜகிருஷ்ணர் இரகுநாதன். கண்டி: பவளரத்ன பப்ளிக்கேஷன்ஸ், 396/12டீ, பேராதனை வீதி, 2வது பதிப்பு, ஜனவரி 2001, 1வது பதிப்பு, ஜுன் 1993. (கொழும்பு 15: கலர் பிரின்ட்ஸ், 712, பு;மெண்டால் வீதி).

(8), 71 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 22xஒ14 சமீ., ISBN: 955-8389-00-5.

இந்நூல் வங்கித்தொழிலையும் அது தொடர்பான சகல செயற்பாடுகளையும் மிகவும் எளிமையான முறையில் இலகு தமிழில் எடுத்துக் கூறுகின்றது. இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், தேசிய சேமிப்பு வங்கி, அபிவிருத்தி வங்கிகள், கிராமிய வங்கிகள், வியாபார வங்கிகள், நிதிக் கம்பெனிகள், குத்தகைக் கம்பெனிகள், கைமாறத்தக்க சாதனங்கள், காசோலை, மாற்றுண்டியல், வாக்குறுதிச் சீட்டு, பணம், நாணய மாற்று விகிதம் ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38011).

ஏனைய பதிவுகள்

Espaces Non payants Sans Annales

Satisfait Mon Salle de jeu Un peu En compagnie de Bonus 1$ De Conserve Trouvez Winoui Casino Sauf que De telles compétences 1500 Jeu Levelup

12113 – புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய கும்பாபிஷேக மலர்: 11.6.2001.

மலர் வெளியீட்டுக் குழு. புத்தளம்: ஆலய பரிபாலன சபை, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், மன்னார் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2001. (கொழும்பு 13: வானதி பிரின்டர்ஸ், 171, ஸ்ரீகதிரேசன் வீதி). (24),

12226 – பாதுகாப்பையும் இறைமையையும் பங்கமின்றிப் பாதுகாத்தல் (கே.ஜி.கண்ணபிரான் அங்குரார்ப்பண நினைவுப் பேருரை).

சி.வி.விக்னேஸ்வரன். சென்னை 600 001: மக்கள் சிவில் உரிமைக் கழகம், பி.யூ.சீ.எல். தமிழ்நாடு/புதுவை, ஹூசைனா மன்ஜில், 255, அங்கப்ப நாயக்கன் தெரு, 1வது பதிப்பு, நவம்பர் 2014. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை). 40