12524 – சைவத் தமிழ் திருமணங்கள்: ஓர் கையேடு.

இ.குமாரவடிவேல் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: குருபரன்-ஆரணி திருமணநாள் ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).

44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

குருபரன்-ஆரணி திருமணநாள் ஞாபகார்த்த வெளியீடாக 10.02.2014 அன்று விநியோகிக்கப்பெற்ற இப்பிரசுரம், யாழ்ப்பாணச் சைவப் பெருமக்களின் திருமணச் சடங்கு தொடர்பான நடைமுறைகளையும் சம்பிரதாயங்களையும் விளக்குகின்றது. பொன்னுருக்கலும் கன்னிக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடுதலும் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பதில் தொடங்கி திருமணத்தின் பின்னர் கால்மாறல் வரையிலுமான அனைத்துக் கட்டங்களிலும் எவ்வாறு செயற்படல் வேண்டும் என்பதை இச்சிறுநூல் விளக்குகின்றது. முதலாவது பின் இணைப்பாக திருமண ஏற்பாட்டு ஒழுங்குகள் பற்றி 15 வகையான செயற்பாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இரண்டாவது இணைப்பில் பொன்னுருக்கும் வைபவத்திற்குத் தேவையான பொருட்களின் பட்டியலும், மூன்றாவது இணைப்பில் மணமக்கள் வீடுகளில் கன்னிக்கால், மரக்கிளைஃமரக்கன்று நடுவதற்குத் தேவையான பொருட்களின் பட்டியலும், அதனைத் தொடர்ந்து வரும் இணைப்புகளில் மணநாளன்று மணமக்கள் வீடுகளில் அலங்காரம், மணநாளன்று மணமகன் அழைப்புஃ நீராட்டின்போது தேவைப்படும் பொருட்கள், மணமகனுடன் மணமண்டபத்துக்கு எடுத்தச் செல்லப்படும் தட்டங்கள், மணநாளன்று கல்யாண மண்டப ஒழுங்குகள், திருமணக் கிரியைகளுக்குத் தேவையான பொருட்கள் என்பன பட்டியலிடப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

14889 இலங்கை தேசப்படத் தொகுதி: முதலாம் பாகம்.

இலங்கை நில அளவைத் திணைக்களம். கொழும்பு 5: இலங்கை நில அளவைத் திணைக்களம், இல. 150, கிருல்ல வீதி, நாரஹேன்பிட்டிய, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). xii, 172 பக்கம், வரைபடங்கள்,

12609 – இலங்கையின் பொதுப் பறவைகள்.

சரத் கொடகம (மூலம்), கணபதிப்பிள்ளை அசோகன் (தமிழாக்கம்). கொழும்பு 3: இலங்கை களப் பறவையியல் குழு, விலங்கியல் துறை, கொழும்புப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு: கருணாரத்ன அன் சன்ஸ்). (8), 146

12279 – அற்புதமான நீரைப் பராமரிப்போம்.

சரத் அமரசிறி (ஆங்கில மூலம்), சீரங்கன் பெரியசாமி (மொழிபெயர்ப்பாளர்). நுகேகொட: இலங்கை இயற்கை ஒன்றியம், 546/3, வட்ட மாவத்தை, கங்கொடவில, 1வது பதிப்பு, ஜுன் 2008. (கண்டி: கிரியேட்டிவ் பிரின்டர்ஸ் அன்ட் டிசைனர்ஸ், இல.

12804 – சுவடுகள்: சிறுகதைத் தொகுப்பு.

மதுபாரதி (இயற்பெயர்: திருமதி பரமேஸ்வரி இளங்கோ). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2016. (திருக்கோணமலை: A.R.T. பிரின்டர்ஸ், 82, T.G. சம்பந்தர் வீதி). xvi, 139 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

12430 – யாழ்நாதம்: இதழ் 3-1997

சிவகாமி அம்பலவாணர் (இதழாசிரியர்). கொழும்பு: பழைய மாணவிகள் சங்கம், யாழ். இந்து மகளிர் கல்லூரி- கொழும்புக் கிளை, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). (2), 94

12833 – செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் (புனைவுக் கட்டுரை).

ஆ.சி. கந்தராஜா (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xx, 112 பக்கம், விலை: ரூபா