12524 – சைவத் தமிழ் திருமணங்கள்: ஓர் கையேடு.

இ.குமாரவடிவேல் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: குருபரன்-ஆரணி திருமணநாள் ஞாபகார்த்த வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).

44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

குருபரன்-ஆரணி திருமணநாள் ஞாபகார்த்த வெளியீடாக 10.02.2014 அன்று விநியோகிக்கப்பெற்ற இப்பிரசுரம், யாழ்ப்பாணச் சைவப் பெருமக்களின் திருமணச் சடங்கு தொடர்பான நடைமுறைகளையும் சம்பிரதாயங்களையும் விளக்குகின்றது. பொன்னுருக்கலும் கன்னிக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடுதலும் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பதில் தொடங்கி திருமணத்தின் பின்னர் கால்மாறல் வரையிலுமான அனைத்துக் கட்டங்களிலும் எவ்வாறு செயற்படல் வேண்டும் என்பதை இச்சிறுநூல் விளக்குகின்றது. முதலாவது பின் இணைப்பாக திருமண ஏற்பாட்டு ஒழுங்குகள் பற்றி 15 வகையான செயற்பாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இரண்டாவது இணைப்பில் பொன்னுருக்கும் வைபவத்திற்குத் தேவையான பொருட்களின் பட்டியலும், மூன்றாவது இணைப்பில் மணமக்கள் வீடுகளில் கன்னிக்கால், மரக்கிளைஃமரக்கன்று நடுவதற்குத் தேவையான பொருட்களின் பட்டியலும், அதனைத் தொடர்ந்து வரும் இணைப்புகளில் மணநாளன்று மணமக்கள் வீடுகளில் அலங்காரம், மணநாளன்று மணமகன் அழைப்புஃ நீராட்டின்போது தேவைப்படும் பொருட்கள், மணமகனுடன் மணமண்டபத்துக்கு எடுத்தச் செல்லப்படும் தட்டங்கள், மணநாளன்று கல்யாண மண்டப ஒழுங்குகள், திருமணக் கிரியைகளுக்குத் தேவையான பொருட்கள் என்பன பட்டியலிடப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

16956 மனோ இராஜசிங்கம் நினைவுரை 2012 : இலங்கை நெருக்கடியில் சர்வதேசத் தலையீடுகளும் தமிழர் அரசியலின் எதிர்காலமும்.

வீ.தனபாலசிங்கம். கொழும்பு: மனோ இராஜசிங்கம் நினைவுக் குழு, 1வது பதிப்பு, 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). 20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5சமீ. தினக்குரல் பிரதம ஆசிரியர் திரு.வீ.தனபாலசிங்கம் அவர்கள் நிகழ்த்திய நினைவுரை.