12527 – முஸ்லிம் நாட்டாரியல்:தேடலும் தேவையும்.

எம்.எஸ்.எம்.அனஸ். திருச்சி மாவட்டம்:
அடையாளம் வெளியீடு, 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621310, 1வது
பதிப்பு, 2008. (சென்னை 5: மணி ஓப்செட்).


104 பக்கம், விலை: இந்திய ரூபா 65., அளவு: 21.5×13.5 சமீ., ISDN: 978-81-7720-
098-0.


முஸ்லிம் நாட்டாரியல் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வுகள் இந்நூலில்
நிகழ்த்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இலங்கையிலும் முஸ்லிம் நாட்டாரியலில் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள துறைசார்ந்த ஆய்வுகளையும் பதிவுகளையும் இந்நூல் பட்டியலிடுகிறது. இலங்கைத் தமிழ் முஸ்லிம்களிடம் வழக்கில் உள்ள வழிநடைச் சிந்து, யானைக்காதல், பதம், அறக்கவி, வசைப்பாடல்கள் போன்ற நாட்டார் தரவுகள் தமிழ் ஆய்வாளர்களுக்கும் வாசகர்களுக்கும் புதிய செய்திகளாகும். இலங்கையில் ஒரு காலத்தில் புழக்கத்தில் இருந்த நாட்டார் நாடகங்கள், இசைப்பாடல்கள், கதைப்பாடல்கள் என்பன போன்ற நாட்டார் நிகழ்த்தல் கலைகளையும் இந்நூல் அறிமுகம் செய்கின்றது. தர்ஹா பண்பாடு, மவ்லூது பாடல்கள், பைத் பாடல்கள், நோன்புகாலக் கலாச்சாரங்கள், காதல் பாடல்கள் என்று பல்வேறுவிதமான தரவுகளையும் அனஸ் இந்நூலில் விரிவாகப்
பதிவுசெய்துள்ளார். இலங்கையில் முஸ்லிம் நாட்டாரியல், வரகவி செய்கு
அலாவுதீனும் இலங்கை நாட்டாரியல் போக்குகளும், முஸ்லிம் வழிநடைச்
சிந்துகள், அரபு நாடுகளில் நாட்டாரியல் ஆகிய ஐந்து இயல்களில் இந்நூல்
எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை
யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47631)

ஏனைய பதிவுகள்

Sverigecasino

Content Bank id online casino free spins | Spel Du Kant Prova Hos Spelklubben Casino Bästa Casinon Villig Näte Vårt Föresats Tillsammans Casinofeber Ännu en