12531 – நாட்டார் பாடல்கள் (தொகுப்பு):க.பொ.த. சா.த. தமிழ்மொழி புதியபாடத்திட்ட பாடநூல்.

பத்திப்பாசிரியர் குழு. கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தபால்பெட்டி எண் 520, புதிய செயலகம், மாளிகாவத்தை, 3வது பதிப்பு, 1981, 1வது பதிப்பு, 1976, 2வது பதிப்பு, 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்).

(6), 98 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் புதிய பாடத்திட்டத்தின் அ-பாடத்திட்டத்திற்கும் ஆ-பாடத்திட்டத்திற்கும் பொதுவாக அமையுமாறு ‘நாட்டார் பாடல்கள்” என்னும் இந்நூல் 9ம் 10ம் தரங்களில் பயிலும் மாணவர்களுக்காகத் தொகுக்கப்பட்டுள்ளது. பதிப்பாசிரியர் குழுவில் சு.சுசீந்திரராஜா, அ.சண்முகதாஸ், எம்.ஏ.நு‡மான், செ.வேலாயுதபிள்ளை ஆகியோர் பணியாற்றியிருந்தனர். இந்நூல் வாழ்த்துப்பாடல், தாலாட்டுப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், வேடிக்கைப் பாடல்கள், காதற் பாடல்கள், தொழிற் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், வசந்தன் பாடல்கள், நாடகப் பாடல்கள், கதைப் பாடல்கள் ஆகிய 10 பிரிவுகளின்கீழ் தொகுக்கப்பெற்ற நாட்டார் பாடல்களைக் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14054).

ஏனைய பதிவுகள்

Online slots For real Currency

Blogs Cats and cash uk: Can you imagine I’m I will be Development A gambling Problem? Simple tips to Gamble On the web In the