12536 – சூடாமணி நிகண்டு பதினொராவது பன்னிரண்டாவது (மூலமும் உரையும்).

மண்டல புருடர் (மூலம்), ஆறுமுகநாவலர் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், நல்லூர், 5வது பதிப்பு, 1925, முதலாவது பதிப்பு விபரமில்லை. (சென்னை: நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சூளை).

82+42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×12 சமீ.

எதுகையும் மோனையும் கவிதையின் எழிலுக்கும் ஏற்றத்துக்கும் மட்டும் காரணமாக நிற்கவில்லை. நெஞ்சம் கவிதைகளை மறக்காமல் இருப்பதற்கும் எதுகைத் தொடரும் மோனைத் தொடரும் பெருந்துணையாக விளங்குகின்றன.இவற்றைத் துணையாகக் கொண்டு நம் முன்னோர்கள் நிகண்டுகளை உருவாக்கினர். தமிழின் சொல்வளத்தைப் பாதுகாக்கும் வங்கிகளாக நிகண்டுகள் விளங்கி வந்துள்ளன. ஒரு சொல்லுக்கு எத்தனை பொருள், ஒரு பொருளுக்கு எத்தனை சொல் என்று வியக்கவைக்கும் இந்நிகண்டுகள் நல்ல தமிழ்ச் சொற்களை காலம் காலமாக எமக்குக் காவித்தந்துள்ளன. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பித்த சூடாமணி நிகண்டு 12 பிரிவுகளில் தேவப்பெயர்த் தொகுதி, மக்கட் பெயர்த் தொகுதி, விலங்கின் பெயர்த் தொகுதி, மரப் பெயர்த் தொகுதி, இடப் பெயர்த் தொகுதி, பல்பொருட் பெயர்த் தொகுதி, செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி, பல்பொருட் பெயர்த் தொகுதி, செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி, பண்பு பற்றிய பெயர்த் தொகுதி, செயல் பற்றிய பெயர்த் தொகுதி, ஒலி பற்றிய பெயர்த் தொகுதி, ஆகியவற்றைத் தொகுத்திருந்தார். இந்நூல் ஒருசொற்பல்பொருட் பெயர்தொகுதி, பல்பெயர்க் கூட்டத்தொரு பெயர்த் தொகுதி ஆகிய பின்னைய இரு இயல்களை மாத்திரம் உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26774).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்