வ.கி.இம்மானுவேல். கொழும்பு: டீ.பு. இம்மானுவேல், தலைமைத் தமிழ்ப் போதனாசிரியர், கொழும்பு வேத்தியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1962. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி அச்சகம், 217 ஒல்கொட் மாவத்தை).
(4), 154 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 19.5×14.5 சமீ.
வணக்கம், மழை, தாய் அன்பு (உரை-செய்யுள்), சிலம்புச் செல்வி (கட்டுரை), மகளிர் பந்தாட்டம் (தேம்பாவணி), ஐம்புலன்கள் அறிவின் வாயில்கள், தமிழும் சுவையும் (திருவாசகம்), கடித ஏமாற்றம், தனியே வந்தான் (இராமன் காதை நிகழ்ச்சி), பொறுமை (உரை-செய்யுள்), நளவெண்பா (சுயம்வர சருக்கம்), திருக்குறள் தந்த வள்ளுவர், மருத்துவத் தாதியரின் மகத்துவ சேவை, ஈழம் எமது நாடு (கட்டுரை), பழந்தமிழர் பண்பாடு (புறநானூறு), உமறுப் புலவர் பண்பு (சீறாப் புராணம்), வீரம் (உரை-செய்யுள்), கண்ணகியின் வழக்கு (நாடகம்), கவிஞனுக்குக் கவரி வீசிய காவலன், பழமொழி (பதினெண் கணக்குகள்), சூழ்ச்சி பலித்தது (செகசுபியர்), பேச்சுக் கலை, யூலியஸ் சீசரின் மறைவு ஆகிய 23 பாடங்களாக இவை எழுதப்பட்டுள்ளன.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2292).