ஆசிரியர் குழு. கொழும்பு: தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 2வது பதிப்பு, 2001, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).
x, 110 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.
கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ், தரம் 4 மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கமைய எழுதப்பட்ட இப்பாட நூல், செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்னும் மொழித்திறன்களை வளர்த்தெடுப்பதற்குப் பொருத்தமான பாடங்களை உள்ளடக்குகின்றது. அவ்வகையில் எழுந்திரு, கல்வியின் சிறப்பு, காளையை முட்டிய பசு, பயனுள்ள வாசிப்பு, சின்னக்குருவி பறக்கிறது, முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி, பழங்கள் பேசுகின்றன, ரைட் சகோதரர்கள், உடல்நலம் பேணுவோம், அனுபவம் புதுமை, நாம் சென்ற கல்விச் சுற்றுலா, தவறு செய்ய மாட்டோம் மயில் ஆகிய 13 பாடத்தலைப்புகளில் தரம் 4 மாணவர்களுக்காக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35478).