வ.நடராஜன், சு.வேலுப்பிள்ளை. சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 1வது பதிப்பு, 1959. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(8), 176 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 21×13.5 சமீ.
மொழிப் பயிற்சி ஆறாம் புத்தகம் 7ஆம், 8ஆம் வகுப்புகளுக்குரியதாக முன்னர் வெளியிடப்பட்டிருந்தது. அதனை அடுத்து வெளிவந்துள்ள உயர்தர வகுப்பு களுக்குரிய இந்நூல், சுருக்கி எழுதுதல், செய்யுள் பொழிப்பு, செய்யுள் நயம், பொது, கட்டுரை எழுதுதல், மொழிபெயர்ப்பு ஆகிய பாடங்களை விளக்கும்வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புப் பகுதிகள் இந்நூலின் அனுபந்தமாகத்தரப்பட்டுள்ளதுடன் செய்யுள் அருஞ்சொற் பொருள் அகராதியும் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18083).