. கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1987. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு).
viii, 139 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18 சமீ.
கல்வி அமைச்சின் 1985ஆம் ஆண்டுப் பாடத்திட்டத்தின்படி இந்நூல் தயாரிக்கப் பட்டுள்ளது. மேற்படி பாடத்திட்டத்தின் முதல் ஏழு அலகுகளை பகுதி ஒன்று உள்ளடக்கியுள்ளது. அணுக்களும் மூலக்கூறுகளும், திணிவு மாறாவிதி, கரைசல்களும் அவற்றின் செறிவும், மனித உடலினுள் பதார்த்தங்கள் கொண்டு செல்லப்படுதல், மூலகங்களும் ஆவர்த்தனவியல்பும், வெப்பம், இயக்கம் ஆகிய ஏழு அத்தியாயங்களில் இவை விரிவான உபதலைப்புகளின்கீழ் விளக்கப் பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11198).